விரைவில் டீசர், 'தல' தீபாவளி: 'வலிமை' அப்டேட் கொடுத்த பிரபல நடிகர்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தல அஜித் நடித்த ‘வலிமை’ திரைப்படம் தீபாவளிக்கு ரிலீசாகும் என்றும் இந்த திரைப்படத்தின் டீசர் விரைவில் ரிலீஸ் ஆகும் எனவும் பிரபல நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஒருவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘வலிமை’ அப்டேட் செய்துள்ளட்ஜஒ அடுத்து அஜித் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தல அஜித் நடித்து முடித்துள்ள ‘வலிமை’ திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்த நிலையில் இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் இரவு பகலாக நடைபெற்று வருகிறது. இந்த படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என ஒரு சாராரும், டிசம்பரில் ரிலீஸ் ஆகும் என்று இன்னொரு சாராரும் கூறி வருகின்றனர். இருப்பினும் படக்குழுவினர்களிடம் இருந்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவந்தால் மட்டுமே இந்த படத்தின் ரிலீஸ் தேதி உறுதி செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் அதே நேரம் ‘வலிமை’ படத்தின் டீசர் கிட்டதட்ட தயாராகி விட்டதாகவும் அதேபோல் மேக்கிங் வீடியோ ஒன்று தயாராக இருப்பதாகவும் இரண்டும் அடுத்தடுத்து வெளியாக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் பிரபல நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஆர்கே சுரேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் ’விரைவில் வருகிறது தல தீபாவளி! டீசர் விரைவில்’ என பதிவு செய்துள்ளார். அஜித் ரசிகரான ஆர்கே சுரேஷின் இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
Coming soon #Thala தீபாவளி #ValimaiTeaser விரைவில்
— RK SURESH (@studio9_suresh) September 16, 2021
??????#AjithKumar #Valimai #ValimaiUpdate #AjithKumar #ThalaAjith @ThalaFansClub @TLasharan @MASSAJITH @ThalaFansOnline pic.twitter.com/fj55QXS2aU
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments