திடீரென ரஜினியை சந்தித்த சரத்குமார்.. என்ன காரணம்?

  • IndiaGlitz, [Sunday,October 09 2022]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை நடிகர் சரத்குமார் திடீரென சந்தித்து உள்ளார். இது குறித்த வீடியோ வைரலாகி வருகிறது. 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை அவ்வப்போது திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரபலங்கள் சந்தித்து வருகின்றனர் என்பது தெரிந்ததே. அந்த வகையில் பிரபல நடிகரும் ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் பெரிய பழுவேட்டரையர் கேரக்டரில் நடித்தவரும், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார் இன்று திடீரென ரஜினியை அவரது வீட்டில் சந்தித்தார்.

இந்த சந்திப்பு குறித்த வீடியோவை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த பதிவில், ‘ரஜினி அவர்களை சந்தித்த இன்றைய நாள் மிகச் சிறப்பாக தொடங்கியது. அவருடன் நான் ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் நடித்த பெரிய பழுவேட்டரையர் கேரக்டர் குறித்து பேசினேன். நாங்கள் இருவரும் நட்பாக காபி அருந்தினோம். எங்களுடைய தொழில் மற்றும் வேலை குறித்து பேசினோம்.

வரலட்சுமியும் எங்களுடன் இருந்தார். வரலட்சுமியின் அடுத்தடுத்த படங்கள் குறித்தும் அவர் ஆர்வத்துடன் கேட்டார். எங்களுக்காக சில மணி நேரங்களை ஒதுக்கிய ரஜினிகாந்த் அவர்களுக்கு நன்றி’ என தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

More News

மஞ்சள் நிற தேவதை பூமிக்கு வந்துவிட்டதா? சினேகாவின் லேட்டஸ்ட் அழகிய போட்டோஷூட்!

மஞ்சள் நிற காஸ்ட்யூமில் சினேகாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் மஞ்சள் நிற தேவதை பூமிக்கு வந்து விட்டதா? என கமெண்ட்ஸ் பகுதியில் பதிவு செய்திருப்பது

தனுஷ்-ஐஸ்வர்யா இணைந்துவிட்டார்களா? கஸ்தூரிராஜா கூறிய பதில்!

தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆகிய இருவரும் பிரிந்து விட்டதாக கடந்த சில மாதங்களுக்கு முன் செய்திகள் வெளியான நிலையில் தற்போது மீண்டும் இருவரும் குழந்தைகளுக்காக இணைந்து விட்டதாக

'பொன்னியின் செல்வன்' வெற்றி எதிரொலி: அடுத்தடுத்து வெளியாகும் சமுத்திரகுமாரியின் 2 படங்கள்!

மணிரத்னம் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் சுபாஷ்கரன் தயாரிப்பில் உருவான 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் கடந்த மாதம் 30ஆம் தேதி வெளியாகி உலகம் முழுவதும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது

சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'ஜெயிலர்' படத்தில் இணைந்த இளம் நடிகை!

 சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'ஜெயிலர்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான

'வெந்து தணிந்தது காடு' நாயகியின் அடுத்த படம்: ஹீரோ, இயக்குனர் யார் தெரியுமா?

 சிம்பு நடிப்பில், கவுதம் மேனன் இயக்கத்தில், ஏஆர் ரகுமான் இசையில் உருவான 'வெந்து தணிந்தது காடு' என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே.