உலக நாயகன் நடிகர் கமல்ஹாசன் மருத்துவமனையில் அனுமதி!

  • IndiaGlitz, [Monday,November 22 2021]

உலகநாயகன் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் அவர்கள் சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவர் இருதயம் தொடர்பான சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து கமல்ஹாசன் தனது டுவிட்டரில் கூறியபோது, ‘அமெரிக்கப் பயணம் முடிந்து திரும்பிய பின் லேசான இருமல் இருந்தது. பரிசோதனை செய்ததில் கோவிட் தொற்று உறுதியானது. மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். இன்னமும் நோய்ப்பரவல் நீங்கவில்லையென்பதை உணர்ந்து அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்’ என்று கூறியுள்ளார்.

கமல்ஹாசன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி அவரது கட்சி தொண்டர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 

More News

புதிதாக திருமணமான நட்சத்திர ஜோடிக்கு வீடியோ காலில் வாழ்த்து கூறிய சிம்பு: வைரல் வீடியோ

சின்னத்திரை நட்சத்திர ஜோடி சமீபத்தில் திருமணம் செய்துகொண்ட நிலையில் அவர்களுக்கு வீடியோகால் மூலம் நடிகர் சிம்பு வாழ்த்து கூறிய தகவல் தற்போது வெளிவந்துள்ளது

செல்ல மகனுடன் மழலை மொழியில் கொஞ்சும் ஹர்திக் பாண்டியா… வைரல் வீடியோ!

இந்தியக் கிரிக்கெட் அணியில் ஆல்ரவுண்டராக இருந்துவரும் ஹர்திக் பாண்டியா தனது மகன் அகஸ்தியாவுடன் கொஞ்சி விளையாடும்

மீண்டும் இணையும் 'பருத்திவீரன்' வெற்றிக் கூட்டணி!

தமிழ் திரையுலகில் மெகா ஹிட்டான படங்களில் ஒன்றான 'பருத்திவீரன்' கூட்டணி மீண்டும் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

டிசம்பரில் வெளியாகும் இரண்டு அதர்வா படங்கள்: என்னென்ன படங்கள்?

தமிழ் திரையுலகின் இளையதலைமுறை நடிகர்களில் ஒருவரான அதர்வாவின் இரண்டு திரைப்படங்கள் வரும் டிசம்பரில் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தாமரையுடன் காரசாரமாக மோதும் பிரியங்கா: அடுத்த எலிமினேஷனா?

கடந்த சில வாரங்களாகவே தாமரையுடன் மோதியவர்கள் எல்லிமினேஷன் ஆகி வரும் நிலையில் இந்த வாரம் பிரியங்கா தாமரையுடன் காரசாரமாக மோதுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது