உலகத்தை ஒரேடியா பாம் போட்டு அழிசுட்டா நல்லா இருக்கும்: பிரபல தமிழ் ஹீரோ டுவிட்
Send us your feedback to audioarticles@vaarta.com
ஹிரோஷிமா நாகசாகி மாதிரி உலகம் முழுவதும் பாம் போட்டு அழித்துவிட்டால் நன்றாக இருக்கும் என பிரபல தமிழ் ஹீரோ ஒருவர் ட்விட்டரில் பதிவு செய்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஏழை எளிய மக்கள் கடும் துயரத்தில் உள்ளனர் என்பதும் இதில் ஊரடங்கு உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதன் காரணமாக ஏழை எளிய மக்கள் வாழ்வாதாரத்திற்கே கஷ்டப்பட்டு கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் அரசு விதிக்கும் கட்டுப்பாடுகள் குறித்து கடும் அதிருப்தி அடைந்த நடிகரும் இசையமைப்பாளரான விஜய் ஆண்டனி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
கொரோனா பணக்காரனை பெரிய பணக்காரனாகவும், எழையை பிச்சைக்காரனாகவும் மாற்றும். எவனாவது ஹிரோஷிமா நாகசாகில போட்ட மாதிரி, உலகத்தை ஒரேடியா பாம் போட்டு அழிசுட்டா நல்லா இருக்கும். வாழ்க வளமுடன்’ என்று பதிவு செய்துள்ளார். விஜய் ஆண்டனியின் இந்த பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கொரோனா??பணக்காரனை பெரிய பணக்காரனாகவும்,
— vijayantony (@vijayantony) January 10, 2022
எழையை பிச்சைக்காரனாகவும் மாற்றும்??
எவனாவது ஹிரோஷிமா நாகசாகில போட்ட மாதிரி,
உலகத்தை ஒரேடியா பாம் போட்டு அழிசுட்டா நல்லா இருக்கும்??
வாழ்க வளமுடன்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com