முதல்வருக்கு கருப்புக்கொடி காட்ட முயன்ற தமிழ் நடிகர் கைது!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகரும் திருப்புவனம் தொகுதி எம்எல்ஏவுமான கருணாஸ் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 2016ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த கருணாஸின் முக்குலத்தோர் புலிப்படை திருப்புவனம் தகுதியைப் பெற்றது. அந்த தொகுதியில் போட்டியிட்டு கருணாஸ் வெற்றி பெற்ற நிலையில் அவர் எம்எல்ஏ ஆனார். அதனை அடுத்து அவர் ஜெயலலிதாவின் மறைவிற்குப்பின் தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு ஆதரவு கொடுத்தார் கருணாஸ். திமுகவுக்கும் இடையே அவர் ஆதரவாக பேசினார்.
இந்த நிலையில் வரும் தேர்தலில் அதிமுக கூட்டணியில் மீண்டும் இடம் பெற அவர் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் அவருக்கு அதிமுக கூட்டணியில் இடம் கிடைக்கவில்லை. இதனை அடுத்து அதிமுகவுக்கு எதிராக பிரசாரம் செய்வேன் என்றும் முதல்வர் தன்னை நம்ப வைத்து ஏமாற்றி விட்டார் என்றும் கருணாஸ் கூறியிருந்தார்.
இந்த நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தற்போது தீவிரமாக தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்து வரும் நிலையில் சிவகங்கையில் பிரசாரம் செய்ய உள்ளார். சிவகங்கை வரும் முதல்வருக்கு கருப்புக் கொடி காட்டப் போவதாக முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் கூறியுள்ளதை கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனையடுத்து முதல்வருக்கு கருப்புக் கொடி காட்ட திட்டமிட்டுள்ளதாக முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிவகங்கையில் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் அவர் தற்போது வீட்டுக் காவலில் உள்ளார் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments