கொரோனாவுக்கு பலியான மேலும் ஒரு நடிகர்: அதிர்ச்சியில் திரையுலகம்

  • IndiaGlitz, [Thursday,May 20 2021]

இந்தியா உள்பட உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக மனித இனத்தையே ஆட்டிப்படைத்து வருகிறது. இந்த கொரோனாவால் லட்சக்கணக்கான உயிர்கள் உலகம் முழுவதும் பலியாகி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக தமிழகத்தை சேர்ந்த திரை உலக பிரமுகர்கள் அடுத்தடுத்து கொரோனா என்ற கொடிய அரக்கனுக்கு பலியாகியுள்ளது திரையுலக பிரமுகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

கடந்த சில நாட்களாக இயக்குனர் தாமிரா, இயக்குநர் கேவி ஆனந்த், இயக்குநர் எஸ்பி ஜனநாதன், நடிகர் நிதிஷ் வீரா உள்பட பல திரையுலக பிரமுகர்கள் அடுத்தடுத்து கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். அந்த வகையில் இன்று மேலும் ஒரு நடிகர் கொரோனாவுக்கு பலியாகியுள்ள தகவல் வெளியாகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

சற்றுமுன் வெளியான தகவலின்படி நடிகர் மற்றும் டப்பிங் யூனியன் உறுப்பினர் வீரமணி என்பவர் கொரோனா தொற்று காரணமாக கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அவர் சிகிச்சை பலனின்றி காலமானதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இதனை அடுத்து திரையுலகினர் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

More News

தக்க நேரத்தில் விலையை குறைத்த முதல்வர்....! எதற்கு தெரியுமா..?

கொரோனா பரிசோதனைக்கான கட்டணத்தை குறைக்க வேண்டும் என, தமிழக அரசு சார்பில் கூறப்பட்டுள்ளது.

சிவகார்த்திகேயன் தந்தை கொலை செய்யப்பட்டாரா? ஹெச் ராஜாவின் பேட்டியால் பரபரப்பு!

பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் தந்தையை பாபநாசம் எம்எல்ஏ கொலை செய்ததாக பாஜக பிரமுகர் ஹெச் ராஜா பேட்டி ஒன்றில் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

வடமாநில தொழிலாளர்களை கடுமையாக தாக்கிய தேமுதிக பிரமுகர்.....! கைது செய்த போலீசார்....!

சென்னையில் வீட்டு வாடகை தராத வடமாநில இளைஞர்களை தேமுதிக பிரமுகர், கடுமையாக தாக்கிய வீடியோ

பிறந்த நாளில் டுவிட்டரில் இணைந்த கமல்-ரஜினி படங்களின் காமெடி நடிகர்!

பாரதிராஜாவின் 'கிழக்கே போகும் ரயில்' என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி கமல், ரஜினி உள்பட பல பிரபலங்களின் படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்த நடிகர் ஜனகராஜ் இன்று தனது பிறந்தநாளை

மாஸ்க் போட்டா மூச்சு முட்டும்… பக்கவிளைவு? அசட்டுத்தனமான கேள்விகளுக்கு அறிவியல் பதில்!

கொரோனா நேரத்தில் உயிர்காக்கும் கவசமாக மாஸ்க் செயல்படுகிறது  என உலகச் சுகாதார மையம் முதற்கொண்டு மருத்துவர்கள் வரை அனைவரும் வலியுறுத்தி வருகின்றனர்.