அதிமுகவில் போட்டியிட விருப்பமனு கொடுத்த காமெடி நடிகர்-இயக்குனர்!

  • IndiaGlitz, [Tuesday,March 02 2021]

தமிழ் திரையுலகின் காமெடி நடிகர் மற்றும் இயக்குனர் அதிமுகவில் போட்டியிட விருப்ப மனு கொடுத்துள்ளது தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

மிளகா, ஆசை ஆசையாய் போன்ற படங்களை இயக்கியவரும், மாயாண்டி குடும்பத்தார், தேசிங்கு ராஜா, மனம் கொத்திபறவை, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் சரவணன் இருக்க பயமேன் துப்பரிவாளன் உள்ளிட்ட பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்தவருமான ரவி மரியா அதிமுகவில் போட்டியிட விருப்ப மனு கொடுத்துள்ளார்.

நடிகர் மற்றும் இயக்குனரான ரவிமரியா கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட இன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் விருப்பமனு கொடுத்தார். இது குறித்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. அதிமுக சார்பில் போட்டியிட அவருக்கு வாய்ப்பு கிடைக்குமா? வாய்ப்பு கிடைத்தாலும் வெற்றி பெறுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

ஏற்கனவே தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை எதிர்த்து திமுக சார்பில் எடப்பாடி தொகுதியில் போட்டியிட பிரபல காமெடி நடிகர் இமான் அண்ணாச்சி விருப்ப மனு கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.