நடிகர்-இயக்குனர் பிரதாப் போத்தன் காலமானார்: திரையுலகினர் இரங்கல்
- IndiaGlitz, [Friday,July 15 2022]
நடிகர்- இயக்குநர் பிரதாப் போத்தன் சற்றுமுன் காலமானதாக தகவல் வெளியாகியுள்ளன
1980 ஆம் ஆண்டு முதல் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் பிரதாப் போத்தன் நடித்துள்ளார் என்பதும் கமல்ஹாசன் நடித்த ‘வெற்றி விழா’ உள்பட ஒருசில படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ‘மீண்டும் ஒரு காதல் கதை’ என்ற படத்தை இயக்கியதற்காக அவர் தேசிய விருது பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நடிகர் இயக்குநர் பிரதாப் போத்தன் சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள அவருடைய வீட்டில் வசித்து வந்த நிலையில் உடல்நலக்குறைவால் இன்று உயிரிழந்தார். அவருக்கு வயது 70. இதனை அடுத்து திரையுலகினர் அவரது உடலுக்கு இறுதி மரியாதை செய்து வருகின்றனர்.
நடிகர் பிரதாப் போத்தன் கடந்த 1985ம் ஆண்டு நடிகை ராதிகாவை திருமணம் செய்தார். ஆனால் ஒரே ஆண்டில் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். இதன் பிறகு அமலா சத்தியநாதன் என்பவரை 1990ஆம் ஆண்டு திருமணம் செய்த நிலையில் இந்த தம்பதிக்கு ஒரு மகள் இருக்கிறார். இந்த நிலையில் பிரதாப்போத்தன் தனது இரண்டாவது மனைவியையும் கடந்த 2012ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் பிரதாப் போத்தன் தமிழில் அழியாத கோலங்கள், மூடுபனி, இளமைக் கோலம், வறுமையின் நிறம் சிவப்பு, நெஞ்சத்தைக் கிள்ளாதே, கரையெல்லாம் செண்பகப்பூ, மதுமலர், குடும்பம் ஒரு கதம்பம், பன்னீர் புஷ்பங்கள், சொல்லாதே யாரும் கேட்டால், நெஞ்சில் ஒரு முள், வா இந்த பக்கம், தில்லு முல்லு, ராணி, பனிமலர், அபர்ணா, வாழ்வே மாயம், அம்மா, எச்சில் இரவுகள், ஒரு வாரிசு வருகிறது, சட்டம் சிரிக்கிறது, நன்றி மீண்டும் வருக, யுத்த காண்டம், புதுமைப் பெண், மீண்டும் ஒரு காதல் கதை, சிந்து பைரவி, மனைவி ரெடி, ஜல்லிக்கட்டு, பேசும் படம், என் ஜீவன் பாடுது, பெண்மணி அவள் கண்மணி, ராம், படிக்காதவன் (தனுஷ்), ஆயிரத்தில் ஒருவன் போன்ற படங்கள் குறிப்பிடத்தக்கது ஆகும்.