அதே எனர்ஜி, அதே டான்ஸ்: தளபதி விஜய்யை 'வாரிசு' செட்டில் பார்த்த பிரபலத்தின் டுவிட்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நடித்து வரும் ‘வாரிசு’ படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் ‘வாரிசு’ படத்தின் செட்டில் விஜய்யை பார்த்த பிரபலம் ஒருவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ’அதே எனர்ஜி அதே டான்ஸ்’ என விஜய்யை புகழ்ந்து டுவிட்செய்து உள்ளார்.
தளபதி விஜய் நடிப்பில், வம்சி இயக்கத்தில், தில் ராஜூ தயாரிப்பில், தமன் இசையில் உருவாகி வரும் திரைப்படம் ‘வாரிசு’. இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளது என்பதும் தற்போது இந்த படத்தின் பாடல் காட்சி ஒன்று படமாக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இம்மாத இறுதியில் அல்லது அடுத்த மாத தொடக்கத்தில் இந்த படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிவடைந்து விடும் என்றும் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் இந்த படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில் சற்று முன் இயக்குனர் மற்றும் குணச்சித்திர நடிகர் மனோபாலா தனது டுவிட்டர் பக்கத்தில் ‘வாரிசு’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் தளபதி விஜய்யை சந்தித்தேன் என்றும் அவரது டான்ஸ் பர்பாமன்ஸ் பார்த்து ஆச்சரியம் அடைந்தேன், பல வருடங்களுக்கு முன் இருந்த அதே டான்ஸ் அதே எனர்ஜியை பார்த்தேன் என்றும் தெரிவித்தார்.
மேலும் விஜய்யுடன் 15 நிமிடம் பேசியதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது மட்டுமின்றி புத்துணர்ச்சியாகவும் இருந்தது என்றும் தெரிவித்துள்ளார். இந்த டுவிட் தற்போது வைரலாகிறது. மேலும் ‘வாரிசு’ திரைப்படத்தில் தான் நடிக்கவில்லை என்றும் மரியாதை நிமித்தமாகவே விஜய்யை பார்க்க சென்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
விஜய், ராஷ்மிகா மந்தனா பிரகாஷ்ராஜ், சரத்குமார், ஷாம், யோகிபாபு, பிரபு, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், சங்கீதா, சம்யுக்தா உள்பட பலர் நடிக்கின்றனர். கார்த்திக் பழனி ஒளிப்பதிவில், பிரவிண கே.எல் படத்தொகுப்பில் உருவாகி வருகிறது.
Met thalapathi VIJAY n varisu set...it was amazing ...he s still d same...lots of energy while dancing ...15mts talk...gave me freshness and energy for me too...
— Manobala (@manobalam) October 20, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments