நடிகர் கின்னஸ் பக்ருவின் புதிய சாதனை
- IndiaGlitz, [Monday,April 23 2018]
டிஷ்யூம், அற்புதத்தீவு, காவலன், 7ஆம் அறிவு போன்ற தமிழ் படங்களிலும் பல மலையாள படங்களிலும் நடித்தவர் நடிகர் கின்னஸ் பக்ரு. 76செமீ உயரமே உள்ள இவர், வினயன் இயக்கிய அற்புதத்தீவு என்ற படத்தின் மலையாள பதிப்பான அல்புதாதீவ் என்ற படத்தில் கதாநாயகனாக நடித்ததால் உலகின் உயரம் குறைந்த நடிகர் என்ற கின்னஸ் சாதனையையும், குட்டியும் கோலும்’ என்ற மலையாள படத்தை இயக்கியதால் ஒரு முழுநீள படத்தை இயக்கிய உலகின் உயரம் குறைந்த இயக்குனர் என்ற சாதனையையும் கையில் வைத்துள்ளார்.
இந்த நிலையில் நடிகர் கின்னஸ் பக்ரூவுக்கு ஒரே நாளில் மூன்று சான்றிதழ்கள் கிடைத்துள்ளது மேலும் ஒரு சாதனையாக கருதப்படுகிறது. இவருடைய பெயர் 'யூனிவர்சல் ரெக்கார்ட் ஃபோரம், லிம்கா புக் ஆஃப் ரிக்கார்ட்ஸ் மற்றும் பெஸ்ட் ஆஃப் இந்தியா ரிக்கார்ட்ஸ் ஆகிய மூன்றிலும் இவரது பெயர் இடம் பெற்றதற்கான சான்றிதழ் ஒரே நாளில் கிடைத்துள்ளது.
41 வயதாகும் பக்ரிக்கு காயத்ரி என்ற மனைவியும் கீர்த்தி என்ற மகளும் உள்ளனர். 9 வயதே ஆகும் மகள் கீர்த்தி 'எண்டே விஷூ' என்ற வீடியோ ஒன்றில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.