தனுசுக்கு டைரக்‌ஷன் மேல ஒரு வெறித்தனம் இருக்குது: பிரபல நடிகரின் பதிவு..!

  • IndiaGlitz, [Monday,December 25 2023]

தனுசுக்கு டைரக்‌ஷன் மேல ஒரு வெறித்தனமான அன்பு இருக்கிறது என்றும், அவரது இயக்கத்தில் உருவான ’D50’ படம் நிச்சயம் சர்வதேச அளவில் கவனத்தை பெறும் என்றும் பிரபல நடிகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

தமிழ் திரையுலகில் நடிகர், பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என பல்வேறு அவதாரங்கள் எடுத்த தனுஷ் ’பா பாண்டி’ என்ற படத்தை இயக்கினார் என்பதும் அந்த படம் நல்ல வரவேற்பு பெற்றது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் தனுஷ் இயக்கத்தில் உருவான இரண்டாவது படமான திரைப்படமான ’D50’ படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள எஸ் ஜே சூர்யா தனுஷின் இயக்கம் குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

‘தனுஷ் ஒரு சூப்பர் டைரக்டர், அவருக்கு டைரக்‌ஷன் மேல என்ன வெறி, என்ன அர்ப்பணிப்பு. அவர் வேற லெவல். ’D50’ படத்தின் கதை மற்றும் வித்தியாசமான காட்சி அமைப்பு ஆகியவை சர்வதேச தரத்துடன் இருக்கும். அதேபோல் அவருடைய அடுத்த படமான 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படமும் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார்.

எஸ்ஜே சூர்யா அடிப்படையில் ஒரு நல்ல இயக்குனர் என்ற நிலையில் அவரே தனுஷின் டைரக்‌ஷன் குறித்து புகழ்ந்து பதிவு செய்திருப்பது தனுஷ் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.