தினகரனை தவிர யாருக்கு வேண்டுமானாலும் ஓட்டு போடுங்கள். ஆனந்த்ராஜ்
- IndiaGlitz, [Saturday,April 08 2017]
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்தவரை அதிமுகவின் விசுவாசியாக இருந்தவர் நடிகர் ஆனந்த்ராஜ். ஒவ்வொரு தேர்தலின்போதும் அதிமுகவின் வெற்றிக்காக சூறாவளி பிரச்சாரம் செய்தவர்
இந்த நிலையில் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் சசிகலா ஆதிக்கம் இருந்த நிலையில் அதிமுகவில் இருந்து ஆனந்த்ராஜ் வெளியேறினார்.
தற்போது சென்னை ஆர்.கே.நகரில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அந்த தொகுதி மக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது: ஆர்.கே.நகர் மக்களை விலைக்கு வாங்க முடியாது. இந்த தேர்தலில் சதி அணிக்கு வாக்களிக்க வேண்டாம். தினகரனை தவிர்த்து ஆர்.கே.நகர் மக்கள் யாருக்கு வேண்டுமானாலும் வாக்களிக்கலாம்' என்று கூறியுள்ளார்.