ரூ.50 கோடி கடன்: பிரபல நடிகரின் தம்பி தற்கொலை

  • IndiaGlitz, [Thursday,March 05 2020]

தமிழ் திரையுலகின் பிரபல வில்லன் மற்றும் காமெடி நடிகரான ஆனந்தராஜ் சகோதரர் 50 கோடி ரூபாய் கடன் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக வெளிவந்துள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

நடிகர் ஆனந்தராஜின் இளைய சகோதரர் கனகசபை. 55 வயதான இவருக்கு இன்னும் திருமணம் நடைபெறவில்லை. இவர் புதுச்சேரியில் வாழ்ந்து வரும் நிலையில் அங்குள்ள அரசியல் பிரமுகர்கள் மற்றும் தொழிலதிபர்களிடம் ஏலச்சீட்டு நடத்தி வந்ததாக தெரிகிறது

இந்த ஏலச்சீட்டில் அவருக்கு கடன் ஏற்பட்டதாகவும், ரூபாய் 50 கோடி வரை கடன் ஏற்பட்டதால் மன உளைச்சலில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று கனகசபை தனது வீட்டில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்

இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் போலீசார் உடனடியாக அவருடைய உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவருடைய வீட்டில் அவர் கைப்பட எழுதிய கடிதம் ஒன்றையும் கண்டுபிடித்தனர். அதில் ஏலச்சீட்டு நடத்தி வந்ததாகவும் 50 கோடிக்கு மேல் நஷ்டம் ஏற்பட்டு விட்டதாகவும், சீட்டு கட்டியவர்கள்தொடர்ந்து பணம் கேட்டு நெருக்கடி கொடுத்து வந்ததால் மனமுடைந்து தற்கொலை செய்து கொள்வதாகவும் எழுதியதாக கூறப்படுகிறது

மேலும் இந்தக் கடிதத்தில் புதுச்சேரியில் உள்ள அரசியல் பிரமுகர்கள் பலரது பெயர் இருப்பதாக கூறப்படுவதால் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
 

More News

ஹுவாயின் புதிய பட்ஜெட் மொபைல்கள்.. அசத்தும் specifications..!

பட்ஜெட் போனில் 10W சார்ஜிங் ஆதரவுடன் 4,000 எம்ஏஎச் பேட்டரி உள்ளது. Huawei P40 Lite E 15,9.81x76.13x8.13மிமீ அளவு மற்றும் வெறும் 176 கிராம் எடை கொண்டதாகும்.

ரஜினியை அடுத்து கமல்ஹாசனை சந்தித்த போராட்டக்கார்ரகள்

சமீபத்தில் மத்திய அரசு அறிமுகம் செய்த சிஏஏ சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் முஸ்லிம் அமைப்புகள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை நேரில் சந்தித்து பேசினார்கள்

மனிதர்களிடம் இருந்து நாய்களுக்கு பரவியுள்ள கொரோனா வைரஸ்..! இப்படி நடப்பது இதுதான் முதல் முறை.

நாய்களுக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுதான் முதன் முதலாக மனிதலிருந்து விலங்குகளுக்கு பரவிய வைரஸாகும்.

காசியாபாத்தில் மேலும் ஒரு கொரோனா வைரஸ் நோயாளி..!

ஏற்கனேவே இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக உறுதிபடுத்தப்பட்டவர்கள் 29 பேர். இன்று இவரோடு சேர்த்து 30 நபராக எண்ணிக்கை கூடியுள்ளது.

வயதோ 105, ஆனாலும் படித்து ஜனாதிபதியிடம் விருது வாங்கும் கேரளா பாட்டிமார்கள்..!

மார்ச் 8 ம் தேதி மகளிர் தினத்தை முன்னிட்டு நடக்கும் நிகழ்ச்சியில் 'நரி சக்தி புராஸ்கர் 2019' விருதினை இருவரும் கூட்டாக பெற இருக்கின்றனர்.