அனிதா குடும்பத்திற்கு தற்போது தேவை நிதியல்ல, நீதி: நடிகர் ஆனந்த்ராஜ்

  • IndiaGlitz, [Wednesday,September 06 2017]

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அதிமுகவில் இருந்து விலகியுள்ள நடிகர் ஆனந்த்ராஜ் அவ்வப்போது ஆட்சியாளர்களின் குறைகளை சுட்டிக்காட்டி வருகிறார். அந்த வகையில் மருத்துவ கனவை இழந்த அனிதா உயிரையும் இழந்த சோக சம்பவம் குறித்து ஆனந்த்ராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

அனிதா இறப்புக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். டாக்டராகி செய்யும் அறுவை சிகிச்சையை அவர் தன் இறப்பின் மூலம் ஆட்சியாளர்களுக்கு செய்து விட்டார். 

தமிழக அரசின் நிதியுதவியை வேண்டாம் என்று அவர்களது குடும்பத்தினர் தெரிவித்து விட்டதால் அவர்களுக்கு மக்கள் பேராதரவு உள்ளது. அந்த குடும்பத்துக்கு தேவை நிதியல்ல, நீதி. நான் இத்தனை நாள்கள் உங்களுடன் பயணித்தேன் என்ற முறையில் கேட்கிறேன். மாணவி அனிதாவின் சொந்த கிராமத்தில் ஒரு ஓலை குடிசையிலாவது டாக்டர் அனிதா மருத்துவமனை என்பதை தமிழக அரசு தொடங்க வேண்டும். அப்போதுதான் பாவவிமோசனம் கிடைக்கும். 

மாணவர்கள் போராட்டம் வலுத்து வரும் நிலையில் கொஞ்சம் கூட கூச்சம் இல்லாமல் தமிழக ஆட்சியாளர்கள் வாய்மூடி இருந்து வருகின்றனர். இதுஎப்படி உள்ளது தெரியுமா, மாணவனை பலமுறை ஆசிரியர் அடித்தாலும் அந்த மாணவர் சிரிக்கும்போது ஆசிரியருக்கு கோபம் வரும். அதுபோல் மக்கள் இத்தனை போராட்டம் நடத்தியும் வாய் திறக்காமல் இருப்பதால் அந்த கோபம் அதிகரித்து வருகிறது. 

வாட் வரிக்கு எதிர்ப்பு முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் வாட் வரியை தான் ஆட்சி செய்த வரை தமிழகத்தில் நுழைய விடாமல் தடுத்து வந்தவர் ஜெயலலிதா. அவர்கள் வழியில் வந்ததாக கூறி கொள்பவர்கள் எதற்காக மத்திய அரசுக்கு அடிபணிய வேண்டும்? எங்கோ இரவில் இரு ரயில் விபத்துகள் நடந்ததற்கு பொறுப்பேற்று ரயில்வே துறை அமைச்சராக இருந்து சுரேஷ் பிரபு தனது பதவியை ராஜினாமா செய்தார். ஆனால் இங்கு ஒரு உயிர் போயுள்ளது, அதற்கு பொறுப்பேற்று சுகாதார துறை அமைச்சர் பதவி விலக வேண்டும். துரும்பும் கிள்ளவில்லை இங்கு ஒரு துரும்பையும் ஆட்சியாளர்கள் கிள்ளிபோட வில்லை. விஜயபாஸ்கரை தகுதிநீக்கம் செய்யும் தகுதி தன்னிடம் இல்லை என்று சொல்வாரேயானால், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது நிலையை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்

இவ்வாறு நடிகர் ஆனந்தராஜ் கூறினார்.

More News

நீட் அடிப்படையில் மாணவர்களை சேர்க்க மறுத்த வேலூர் சி.எம்.சி

இந்த ஆண்டு மருத்துவம் பயிலும் மாணவர்கள் நீட் தேர்வின் அடிப்படையில் தான் சேர்க்கப்பட வேண்டும்..

பிக்பாஸ் வீட்டில் திடீரென நுழைந்த வையாபுரி மனைவி

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த இரண்டு நாட்களாக ஃப்ரீஸ் டாஸ்க் ஓடிக்கொண்டிருக்கின்றது.

மெரினாவுக்கும் பரவியது மாணவர்களின் நீட் போராட்டம்

கடந்த சில மாதங்களாகவே நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் மாணவர்கள்..

நடிகர் செந்தில் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தது ஏன்?

பிரபல நகைச்சுவை நடிகர் செந்தில், தினகரன் அணியின் ஆதரவாளர் என்பது அனைவரும் அறிந்ததே...

மலையாள நடிகர் திலீப்புக்கு 2 மணி நேரம் பரோல்

பிரபல மலையாள நடிகை ஒருவரை காரில் கடத்தி பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவத்திற்கு மூலகாரணமாக இருந்ததாக குற்றம் சாட்டப்பட்ட பிரபல மலையாள நடிகர் திலீப் சமீபத்தில் கைது செய்யப்பட்டார்...