நடிகர் அமிதாப்பச்சனுக்கு மீண்டும் கொரோனா: டுவிட்டரில் என்ன சொல்லியிருக்கார் பாருங்கள்!
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த 2020 ஆம் ஆண்டில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நடிகர் அமிதாப்பச்சனுக்கு தற்போது மீண்டும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதை அடுத்து அவர் தனது டுவிட்டரில் இது குறித்து பதிவு செய்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் முதல் அலை ஏற்பட்ட கடந்த 2020ஆம் ஆண்டு நடிகர் அமிதாப் பச்சன், அவருடைய மகன் அபிஷேக் பச்சன் மற்றும் அவருடைய மருமகள் ஐஸ்வர்யா ராய் ஆகியோருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. இதனை அடுத்து கிட்டத்தட்ட ஒரு மாதம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின்னர் மூவரும் டிஸ்சார்ஜ் ஆகினர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் 2 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது மீண்டும் நடிகர் அமிதாப்பச்சனுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக இந்தியாவில் உள்ள பல பிரபலங்களுக்கு குறிப்பாக சோனியா காந்தி, முதல்வர் ஸ்டாலின் உள்பட பலருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் அந்த பட்டியலில் தற்போது அமிதாப்பச்சன் மீண்டும் இணைந்துள்ளார்.
இந்த நிலையில் தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதை அடுத்து தனது டுவிட்டரில் அமிதாப்பச்சன் கூறியிருப்பதாவது: எனக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் பாசிட்டிவ் என வந்துள்ளது. எனவே என்னிடம் தொடர்பில் இருந்தவர்கள் எனக்கு அருகில் இருந்தவர்கள் தயவு செய்து கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுங்கள்' என்று தெரிவித்துள்ளார். இதனை அடுத்து அமிதாப் பச்சன் கொரோனாவில் இருந்து விரைவில் மீண்டு வரவேண்டும் என ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
T 4388 - I have just tested CoViD + positive .. all those that have been in my vicinity and around me, please get yourself checked and tested also .. ??
— Amitabh Bachchan (@SrBachchan) August 23, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com