அமீர்கான் வீட்டுக்குள்ளும் புகுந்தது கொரோனா: பாலிவுட்டில் பரபரப்பு
- IndiaGlitz, [Tuesday,June 30 2020]
இந்தியா முழுவதும் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் தாக்கம் மிக அதிகமாகி வருகிறது என்பது தெரிந்ததே. இந்தியாவில் தற்போது 5 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்
இந்த நிலையில் இந்தியாவில் பாமர மக்களை மட்டுமன்றி பிரபலங்களையும் குறிப்பாக திரையுலக பிரபலங்களையும் அவ்வப்போது கொரோனா வைரஸ் தாக்கி வருவது குறித்த செய்திகளை பார்த்து வருகிறோம். சமீபத்தில் பாலிவுட்டின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவரான போனிகபூர் வீட்டில் வேலை செய்யும் ஒரு சிலருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்தது என்பதை பார்த்தோம்
இந்த நிலையில் தற்போது பாலிவுட் சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான அமீர்கான் வீட்டிற்குள்ளும் கொரோனா வைரஸ் புகுந்துவிட்டது என்ற தகவல் பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது. இது குறித்து அமீர்கான் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது
என்னுடைய அலுவலக ஊழியர்களில் ஒரு சிலருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு மும்பை சுகாதார துறை அதிகாரிகளின் கவனத்தில் உள்ளனர் அவர்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகள் செய்யப்பட்டு வருகின்றன, இந்த விஷயத்தில் மும்பை சுகாதாரத்துறைக்கு நான் மிகவும் நன்றி செலுத்த கடமைப்பட்டுள்ளேன். கொரோனாவால் பாதிக்கப்பட்ட என்னுடைய ஊழியர்களை அவர்கள் மிகவும் கவனத்துடன் கவனித்து வருகின்றனர்
மேலும் என்னுடைய அலுவலக ஊழியர்களில் ஒரு சிலரை தவிர மற்ற அனைத்து ஊழியர்களுக்கும் நெகட்டிவ் என்ற ரிசல்ட் வந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் என்னுடைய தாயாருக்கும் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. அவருடைய பரிசோதனை முடிவை மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றேன். அவருக்கு நெகட்டிவ் ரிசல்ட் வரவேண்டும் என்று பிரார்த்தனை செய்து வருகிறேன் என்று அமீர்கான் கூறியுள்ளார்
மேலும் மும்பை சுகாதாரத்துறை, மும்பை கார்ப்பரேஷன் அதிகாரிகள் மற்றும் மருத்துவர்கள், நர்சுகள், மருத்துவ ஊழியர்கள் ஆகிய அனைவருக்கும் எனது நன்றியை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அமீர்கான் தனது அறிக்கையில் கூறியுள்ளார்
— Aamir Khan (@aamir_khan) June 30, 2020