கடைசி படம் மிகப்பெரிய தோல்வி.. நடிப்பதையே நிறுத்தி கொண்ட பிரபல நடிகர்?

பிரபல நடிகரின் நடிப்பில் உருவான திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய தோல்வி அடைந்ததை அடுத்து சில ஆண்டுகளுக்கு நடிப்பதையே அவர் நிறுத்திக் கொள்ளும் முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகரான அமீர்கான் நடித்த பல திரைப்படங்கள் சூப்பர் ஹிட் ஆகியுள்ள நிலையில் அவரது நடிப்பில் உருவான ‘லால்சிங் சத்தா’ என்ற திரைப்படம் கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியாகி எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

இந்த படம் சுமார் ரூ.180 கோடி பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படும் நிலையில் ரூ.130 கோடி மட்டுமே உலகம் முழுவதும் வசூல் செய்ததாக தெரிகிறது. இதனால் இந்த படத்தின் தயாரிப்பாளர், வினியோகஸ்தர், திரையரங்கு உரிமையாளர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் அமீர்கான் அதிரடியாக சில ஆண்டுகளுக்கு திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்திக் கொள்ளும் முடிவை எடுத்துள்ளதாகவும் குடும்பத்துடன் தனது நேரத்தை செலவு செய்ய இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும் இந்த இடைப்பட்ட காலத்தில் அவர் சில படங்களை தயாரிக்க மட்டும் செய்வார் என்று கூறப்படுகிறது.

அமீர்கான் எடுத்த அதிரடி முடிவு அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.