காமெடி நடிகர் அல்வா வாசு காலமானார்.

  • IndiaGlitz, [Friday,August 18 2017]

பிரபல காமெடி நடிகர் அல்வா வாசு கடந்த சில நாட்களாக உடல்நலமின்றி மதுரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சையின் பலனின்றி நேற்று காலமானார்.

கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டு கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக சிகிச்சை பெற்று வந்த அல்வா வாசுவின் உடல்நிலை நேற்று முன் தினம் மோசமான நிலைக்கு வந்தது. அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்று திரையுலகினர் பிரார்த்தனை செய்து வந்த நிலையில் நேற்றிரவு அவர் காலமானார்.

சத்யராஜ் நடிப்பில் மணிவண்ணன் இயக்கத்தில் வெளியான 'அமைதிப்படை' படத்தில் சத்யராஜூக்கு அல்வா வாங்கி கொடுக்கும் காட்சியில் நடித்ததால் அவருக்கு அல்வா வாசு என்ற பெயர் ஏற்பட்டது. இந்த படத்திற்கு பின்னர் அஜித், விஜய் உள்பட பல முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்துள்ளார். குறிப்பாக வடிவேல் குரூப்பில் தவறாமல் இடம்பெற்றிருப்பார்.

அல்வா வாசு நல்ல இசைஞானம் கொண்டவர். ஒரு இசையமைப்பாளர் ஆக வேண்டும் என்ற கனவுடன் தான் சென்னைக்கு வந்தார். ஆனால் அந்த வாய்ப்பு கிடைக்காததால் மணிவண்ணன் அவர்களிடம் உதவி இயக்குனராக சேர்ந்தார். பின்னர் காமெடி டிராக்குகள் எழுதி அதில் நடிக்கவும் செய்தார்.

அல்வா வாசு அவர்களின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்ளும் IndiaGlitz அவருடைய ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனையும் செய்கிறது.

More News

ஓடும் காரில் பாலியல் தொல்லைக்கு ஆளான பிரபல நடிகை: இயக்குனர் கைது

கடந்த பிப்ரவரி மாதம் பிரபல மலையாள நடிகை ஒருவர் ஓடும் காரில் பாலியல் தொல்லைக்கு ஆளான சம்பவம் தென்னிந்தியாவையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது மட்டுமின்றி இந்த சம்பவம் தொடர்பாக பிரபல நடிகர் திலீப் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை செய்ய விசாரணை கமிஷன்: முதல்வர் அதிரடி அறிவிப்பு

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அணிக்கும், தினகரன் அணிக்கும் இடையிலான கருத்துவேறுபாடு கடந்த சில நாட்களாக உச்சகட்டத்தில் உள்ளது.

பிக்பாஸ் வீட்டில் நுழைந்த மேலும் ஒரு நடிகர்

ஓவியாவின் வெளியேற்றத்திற்கு பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சி முற்றிலும் டல்லடிக்க ஆரம்பித்துவிட்டதாகவே விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன.

உயிருக்காக போராடும் காமெடி நடிகருக்கு விஷால் செய்த நிதியுதவி

சுமார் 900 படங்களுக்கும் அதிகமான தமிழ் படங்களில் நடித்த நகைச்சுவை நடிகர் அல்வா வாசு உயிருக்கு போராடியவாறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது தெரிந்ததே.

சமூக நலனுக்காக நீச்சல் உடையில் இணைந்த டைட்டானிக் ஜோடி

உலகின் மிகச்சிறந்த சினிமா ஜோடிகளில் ஒன்று டைட்டானிக் படத்தில் நடித்த டிகேப்ரியோ மற்றும் கேட் வின்ஸ்லெட் ஜோடி.