இன்று 'கோட்' படப்பிடிப்பின் கடைசி நாள்.. நெகிழ்ச்சியுடன் பதிவு செய்த நடிகர்..

  • IndiaGlitz, [Sunday,May 19 2024]

தளபதி விஜய் நடித்து வரும் ‘கோட்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்ற நிலையில் சமீபத்தில் விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு முடிவடைந்ததாகவும் இருப்பினும் மற்ற நட்சத்திரங்களில் படப்பிடிப்பு இருப்பதாகவும் தகவல் வெளியானது.

இந்த நிலையில் ஒரு பக்கம் இயக்குனர் வெங்கட் பிரபு அமெரிக்கா சென்று இந்த படத்தின் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் காட்சிகளின் பணியை மேற்பார்வை பார்த்ததாகவும் அதன் பின்னர் அவர் தனது சமூக வலைத்தளத்தில் ‘கோட்’ படத்தின் கிராபிக்ஸ் காட்சிகளின் பணிகள் அனைத்தும் முடிந்து விட்டதாகவும் பதிவு செய்திருந்தார்.

இதனை அடுத்து ‘கோட்’ படத்தின் மீதமுள்ள படப்பிடிப்பு மற்றும் டப்பிங் உள்பட தொழில்நுட்ப பணிகள் நடந்து வருவதாக தகவல் வெளியான நிலையில் சற்று முன்னர் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து வரும் அஜ்மல் தனது சமூக வலைதளத்தில் ஒரு நெகிழ்ச்சியான ஒரு பதிவை செய்துள்ளார்.

அந்த பதிவில் ’இன்றுடன் எனது கேரக்டர் படப்பிடிப்பு முடிந்தது, ‘கோட்’ படத்தில் பணி புரிந்தது ஒரு அற்புதமான பயணம், இந்த கேரக்டரை முடித்துவிட்டு படக்குழுவினர்களிடம் இருந்து விடைபெறும் போது ஒரு பக்கம் மகிழ்ச்சியாகவும் ஒரு பக்கம் வருத்தமாகவும் இருக்கிறது, அடுத்து இந்த படத்தின் அப்டேட்டுக்காக காத்திருங்கள் என்றும் பதிவு செய்துள்ளார். அஜ்மலின் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

More News

ஐஸ்லாந்தில் 'புஷ்பா 2' பாடலுக்கு ஆட்டம் போட்ட கமல்-ரஜினி பட நடிகை.. வைரல் வீடியோ..!

கமல்ஹாசன், ரஜினிகாந்த் உள்பட பல பிரபலங்களுடன் இணைந்து நடித்த நடிகை மீனா, ஐஸ்லாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்து உள்ள நிலையில் அங்கு அவர் 'புஷ்பா 2' படத்தின் பாடலுக்கு செம ஆட்டம் போட்ட

ரெடின் கிங்ஸ்லி மனைவிக்கு ஏற்கனவே குழந்தை இருக்கிறதா? அவரே அளித்த விளக்கம்..!

காமெடி நடிகர் ரெடின் கிங்ஸ்லி  சீரியல் மற்றும் திரைப்பட நடிகை சங்கீதாவை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் திருமணம் செய்து கொண்ட நிலையில் சங்கீதாவுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தனது அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் 'உப்பு புளி காரம்'  சீரிஸ் ஸ்ட்ரீமிங் தேதி அறிவிப்பு..!

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார் அதன் அடுத்த அதிரடி ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸ் 'உப்பு புளி காரம்'  சீரிஸை வரும் மே 30 முதல் ஸ்ட்ரீம் செய்யவுள்ளது.

இதற்காக தான் சீரியலில் இருந்து விலகினாரா பிரியங்கா நல்காரி? வைரலாகும் புகைப்படங்கள்..!

ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பான 'நள தமயந்தி' என்ற சீரியலில் பிரியங்கா நல்காரி நடித்துக் கொண்டிருந்த நிலையில் திடீரென அவர் அந்த சீரியலில் விலக இருப்பதாக செய்திகள் பரவியது.

குக் வித் கோமாளி சீசன் 5.. முதல் எலிமினேஷன் இவரா?

விஜய் டிவியில் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி கடந்த ஏப்ரல் மாதம் இறுதி வாரத்தில் ஆரம்பித்தது என்பதும் மூன்று வாரங்கள் முடிவடைந்த நிலையில் தற்போது நான்காவது வாரம் விறுவிறுப்பாக ஒளிபரப்பானது என்பதும்