11 வருட காதலியை கரம்பிடித்த “வலிமை“ நடிகர்… வைரல் புகைப்படம்!

  • IndiaGlitz, [Monday,November 22 2021]

போனி கபூர் தயாரிப்பில் தல அஜித் நடிப்பில் உருவாகிவரும் “வலிமை“ திரைப்படத்தில் வில்லனாக நடித்திருப்பவர் தெலுங்கு நடிகர் கார்த்திகேயா கும்மகோண்டா. இவர் கல்லூரி காலத்தில் இருந்து காதலித்துவரும் தனது தோழி லோஹிதா ஷெட்டி என்பவரை நேற்று ஹைத்ராபாத்தில் திருமணம் செய்துகொண்டுள்ளார். இதுகுறித்த புகைப்படம் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

தெலுங்கில் வெளியான “ஆர்எக்ஸ் 100“ எனும் திரைப்படத்தில் நடித்து பிரபலமானவர் நடிகர் கார்த்திகேயா. இன்ஜினியரிங் பட்டம்பெற்ற இவர் தனது கல்லூரி காலத்திலிருந்தே லோஹிதாவை காதலித்து வந்துள்ளார். முன்னதாக நடிகர் ராஜா விக்ரமார்கா ப்ரி ரிலீஸ் நிகழ்வில் கலந்துகொண்ட நடிகர் கார்த்திகேயா மேடையிலேயே சினிமா பாணியில் தனது காதலை வெளிப்படுத்தினார். இது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் நிச்சயதார்த்தம் செய்துகொண்ட இந்தக் காதல் ஜோடி, நேற்று ஹைத்ராபாத்தில் கோலகலமாக திருமணம் செய்துகொண்டுள்ளனர். இவர்களது திருமணத்திற்கு தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி, அல்லு அர்ஜுன், தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் போன்றோர் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தனர்.

இதனால் கல்லூரி காலத்து காதலியை 11 வருடம் கழித்து கரம்பிடித்த நடிகர் காத்திகேயாவிற்கு ரசிகர்கள் பிரபலங்கள் எனப் பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். மேலும் இவர்களது திருமணப் புகைப்படம் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன.