நடிகர் அஜித் வாங்கிய இன்னொரு புதிய கார்.. விலை இத்தனை கோடியா?

  • IndiaGlitz, [Friday,September 13 2024]

நடிகர் அஜித் கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் புதிய கார் வாங்கியதாகவும் அந்த காரை அவர் மணிக்கு 234 கிலோ மீட்டர் வேகத்தில் ஓட்டிய வீடியோ இணையத்தில் வைரல் ஆனது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் தற்போது அஜித் மீண்டும் ஒரு புதிய கார் வாங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.

நடிகர் அஜித் தற்போது ஃபோர்ஷே ஜிடி3 என்ற வகை காரை வாங்கி உள்ளதாகவும் இந்த காரின் மதிப்பு சுமார் 4 கோடி ரூபாய் என்று கூறப்படுகிறது. அஜித்தின் மனைவி ஷாலினி இந்த காரின் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் இந்த கார் குறித்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

அஜித்தின் மனைவி ஷாலினி இந்த புகைப்படத்தை பதிவு செய்து மூன்று மணி நேரமே ஆகியுள்ள நிலையில் லட்சக்கணக்கான லைக்ஸ், நூற்றுக்கணக்கான கமெண்ட்ஸ்கள் பதிவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகர் அஜித் தற்போது மகிழ்ந்திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் ’விடாமுயற்சி’ மற்றும் ஆதித் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் ’குட் பேட் அக்லி’ ஆகிய இரண்டு திரைப்படங்களில் நடித்து வருகிறார். இரண்டு படங்களின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் ’விடாமுயற்சி’ திரைப்படம் வரும் தீபாவளி அன்றும் ’குட் பேட் அக்லி’ என்ற திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்திலும் வெளியாகும் என்று கூறப்படுகிறது.