மாயாவுடன் நடுத்தெருவில் சண்டை போட்ட ஆரி

  • IndiaGlitz, [Saturday,March 05 2016]

மாயா' படத்தில் நயன்தாராவுடன் ஜோடியாக நடித்த ஆரி, தற்போது 'உன்னோடு கா' என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக 'மாயா' என்ற அறிமுக நடிகை நடித்து வருகிறார். இவர் உண்மையில் ஒரு டாக்டர் என்பது குறிப்பிடத்தக்கது. அபிராமி ராமநாதன் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு அவருடைய சொந்த கிராமமான சிவகெங்கை அருகில் உள்ள பூலங்குறிச்சி என்ற பகுதியில் நடைபெற்று வருகிறது.


இந்த படத்தின் ஒரு முக்கிய காட்சிக்காக ஹீரோ ஆரியுடன் நடிகை மாயா கட்டிப்புரண்டு நடுத்தெருவில் சண்டை போட்டு உருளுவது போன்று படமாக்கப்பட்டது. இந்த படப்பிடிப்பை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

பிரபு, ஊர்வசி, பாலசரவணன், மன்சூர் அலிகான், மனோபாலா மற்றும் பலர் நடித்து வரும் இந்த படத்தை ஆர்கே என்பவர் இயக்கி வருகிறார். ஆக்சன் மற்றும் ரொமான்ஸ் படமாக உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் இன்னும் ஓரிரு மாதங்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிடும் என்று கூறப்படுகிறது. இந்த படத்திற்கு சத்யா இசையமைத்து வருகிறார்.

More News

மொட்ட சிவா கெட்டசிவா பர்ஸ்ட்லுக் ரிலீஸ் தேதி

கடந்த ஆண்டு 'காஞ்சனா 2' என்ற மெகா ஹிட் படத்தை கொடுத்த ராகவா லாரன்ஸ் தற்போது 'பைரவா', மொட்டசிவா கெட்டசிவா மற்றும் 'முனி 3 நாகா'...

சூர்யாவின் 24 டீஸரைப் புகழ்ந்து தள்ளிய தமிழ் ஹீரோ

கோலிவுட், பாலிவுட்டில் தனது தனி முத்திரையை பதித்த நடிகர் தனுஷ் ஹாலிவுட் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்...

பாட்ஷாவையும் தெறியையும் ஒரே நேரத்தில் முடித்த ஜி.வி.பிரகாஷ்

இளம் இசையமைப்பாளராகவும், முன்னணி ஹீரோவாகவும் வலம் வந்து கொண்டிருக்கும் ஜி.வி.பிரகாஷ் தெறி'...

பிரபல தொழிலதிபருடன் ஷங்கர் பட நாயகி திருமணம்

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் நடித்த 'இந்தியன்' திரைப்படத்தில் இரண்டு நாயகிகளில் ஒருவராக நடித்தவர் ஊர்மிளா...

நடிகர் சங்க புகாருக்கு ராதிகாவின் ரியாக்ஷன்

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவர் ரூ.1.65 கோடி சங்கத்தின் பணத்தை முறைகேடு செய்ததாக புதிய நிர்வாகிகள் நேற்று போலீஸ் புகார் அளித்ததும்...