ரூ.100க்கு வீட்டில் இருந்தே படம் பார்க்கலாம். ஆரி யோசனை
- IndiaGlitz, [Tuesday,July 04 2017]
ஜிஎஸ்டி பிரச்சனையால் கடந்த சில நாட்களாக திரையுலகமே அதிர்ச்சியில் மூழ்கியுள்ளது. ஜிஎஸ்டி வரி 28%, தமிழக அரசின் வரி 30% என மொத்தம் 58% வரி கட்டி திரைத்தொழில் நடத்துவது என்பது சாத்தியமே இல்லை என்பது அனைத்து திரையுலகினர்களின் கருத்தாக உள்ளது. இதனால் கடந்த இரண்டு நாட்களாக திரையரங்குகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன
இந்த நிலையில் 'உறுதிகொள்' இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் ஆரி யோசனை ஒன்றை தெரிவித்துள்ளார். இனிமேல் திரையரங்குகளை மட்டும் நம்பி தயாரிப்பாளர்கள் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளிடம் நான் ஒரு யோசனை கூறியுள்ளேன்.
தயாரிப்பாளர் சங்கத்திற்கு என ஒரு ஆப் தயார் செய்து அதில் மாதம் ரூ.100 பெற்று கொண்டு அனைத்து திரைப்படங்களையும் ரிலீஸ் செய்யலாம். தமிழகத்தில் 7 கோடி பேர் உள்ளனர். அதில் சினிமா பார்க்கும் பழக்கம் உள்ளவர்கள் 4 கோடி பேர். குறைந்தது ஒருகோடி பேர் இந்த ஆப் மூலம் சினிமா பார்த்தால் ரூ.100 கோடி வருமானம் கிடைக்கும். இந்த பணத்தை தயாரிப்பாளர்கள் பகிர்ந்து கொள்ளலாம்.
கேபிள் டிவிக்கே ரூ.100 கொடுக்கும் பொதுமக்கள் ஒரு மாதத்தில் ரிலீஸ் ஆகும் அனைத்து படங்களையும் பார்க்க ரூ.100 கொடுக்க தயங்க மாட்டார்கள். எனவே இதற்கான பணி நடந்து வருகிறது. விரைவில் தயாரிப்பாளர் சங்கத்தின் ஆப் வெளியாகும். இதில் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் உள்பட பலரும் இணைய வாய்ப்பு உள்ளது' என்று பேசினார்.