பிரபல இளம் நடிகரின் தாயார் திடீர் மரணம்

  • IndiaGlitz, [Friday,February 24 2017]

நயன்தாரா நடித்த 'மாயா' உள்பட பல படங்களில் நடித்துள்ள இளம் நடிகர் ஆரி. பழனியில் இருந்து சென்னைக்கு வந்து கோலிவுட் திரையுலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர்.

இந்நிலையில் இன்று அதிகாலை ஆரியின் தாயார் முத்துலட்சுமி புதுக்கோட்டையில் காலமானார். அவரது உடல் இறுதிச்சடங்கிற்காக சொந்த ஊரான பழனிக்கு இன்று எடுத்து செல்லப்படுவதாகவும், நாளை அவரது உடல் அடக்கம் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் திண்டிவனம் அருகே படப்பிடிப்பில் இருந்த ஆரி, தாயார் மறைவு குறித்த செய்தி கேட்டதும் பழனிக்கு விரைந்துள்ளார். தாயாரை இழந்து தவிக்கும் ஆரிக்கு திரையுலகினர்களும் நண்பர்களும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வரும் நிலையில் ஆரியின் தாயாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்தனை செய்வோம்.

More News

தனுஷின் 'பவர்பாண்டி' இசை வெளியீட்டு தேதி அறிவிப்பு

நடிகர், தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர், என பல்வேறு அவதாரங்களில் கோலிவுட் திரையுலகில் ஜொலித்து வரும் தனுஷ், முதன்முறையாக இயக்கியுள்ள திரைப்படம் 'பவர்பாண்டி'. ராஜ்கிரண் முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த படம் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது....

ஏ.ஆர்.முருகதாஸ்-மகேஷ்பாபு ரிலீஸ் தேதி அறிவிப்பு

பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் பிரின்ஸ் மகேஷ்பாபு நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கின்றது.

ரஜினி படத்திற்காக இறக்குமதி ஆகியுள்ள ஜெர்மனி-இங்கிலாந்து ஸ்டண்ட் இயக்குனர்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் '2.0' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் மார்ச் முதல் நிறைவு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது...

விஜய் 61' படமும் '3' செண்டிமெண்டும்....

இளையதளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கி வரும் 'விஜய் 61' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் ஒருசில செண்டிமெண்ட்டுகள் தற்போது தெரியவந்துள்ளன

ராகவா லாரன்ஸின் 'சிவலிங்கா' ரிலீஸ் தேதி அறிவிப்பு

ராகவா லாரன்ஸ் நடித்த பெரும் எதிர்பார்ப்புக்குள்ள திரைப்படமான 'மொட்டசிவா கெட்டசிவா' திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகிறது. 'காஞ்சனா' சூப்பர் ஹிட் வெற்றிக்கு பின்னர் வெளியாகும் ராகவா லாரன்ஸ் படம் என்பதால் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது...