பழங்குடி மக்களின் மேம்ப்பாட்டிற்காக ஆரியின் திட்டம்

  • IndiaGlitz, [Saturday,February 09 2019]

நீலகிரி மாவட்டம் கூடலூர்,பந்தலூர் பகுதி பழங்குடியினர் வாழ்வு மேம்பாட்டிற்காக பல புதிய முயற்சிகளை நடிகர் ஆரி தனது 'மாறுவோம் மாற்றுவோம் அறக்கட்டளை மூலம் அங்குள்ள NAWA (Nilagiri Aadhivasi welfare association) தொண்டு நிறுவனத்துடன் இணைந்து செயல்பட உள்ளார்

நீலகிரி மாவட்ட பழங்குடியினர் வாழ்வு மேம்பாட்டிற்காக அந்த சமுதாய மக்களின் கல்வி மற்றும் பொருளாதார நிலை உயர வேண்டும் என்பதற்காகவும் நாவா தொண்டு நிறுவனம் ஏற்பாடு செய்த கலந்தாய்வு கூட்டத்திற்கு பத்திரிகையாளர் சாந்தி எடுத்த பழங்குடியினர் பற்றிய டாக்குமெண்டரி பார்த்து,அவரது வேண்டுகோளை ஏற்று பங்கு பெற்றதாக நடிகர் ஆரி கூறியுள்ளார்.

இந்த கூட்டத்தில் பேசிய் நடிகர் ஆரி, 'நாவா தொண்டு நிறுவனத்துடன் எங்கள் மாறுவோம் மாற்றுவோம் அறக்கட்டளை இணைந்து, பழங்குடியினர் உற்பத்தி செய்யும் விவசாய பொருட்களை இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாக விற்பனை செய்ய அந்தந்த பழங்குடி இன தலைவர்களோடு பேசி முன்னேற்பாடுகள் செய்து வருகிறோம்.

மேலும் பழங்குடி இன மக்களின் கல்வி வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கவும், அழிந்துவரும் இவர்களின் கலாச்சாரத்தை காப்பாற்றவும் பணியாற்ற உள்ளதாகவும் அவர்களது வாழ்வியலை பற்றி தான் மட்டுமல்ல எனது குடும்ப உறுப்பினர்களும் தெரிந்து கொள்ள என் மனைவி மற்றும் குழந்தையோடு ஒருவாரம் தங்கி அவர்களின் வாழ்க்கை முறையை தெரிந்து கொண்டோம் என்றும் ஆரி தெரிவித்தார்