அஜித்துக்கு வில்லனாக நடிக்க ஆசை. பிரபல ஹீரோ

  • IndiaGlitz, [Monday,February 22 2016]

'மிருகம்' என்ற படத்தில் அறிமுகமாகி அதன் பின்னர் 'ஈரம்', 'அரவான்', 'யாகாவாராயினும் நா காக்க' போன்ற பல படங்களில் நடித்த கோலிவுட்டின் இளம் நாயகன் ஆதி, சமீபத்தில் சமூக வலைத்தளம் ஒன்றில் ரசிகர்கள் கேட்ட சுவாரஸ்யமான பல கேள்விகளுக்கு பதிலளித்தார். அவற்றில் அஜித் குறித்து ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கும் அவர் ரசிக்கத்தக்க வகையில் பதில் கூறியுள்ளார்.


தல அஜித் மற்றும் பவர்ஸ்டார் பவன்கல்யாண் குறித்து ஓரிரு வார்த்தைகள் கூறும்படி ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த ஆதி, இருவருமே குறைவாக பேசுபவர்கள் அதே நேரத்தில் நிறைவான மனிதத்தன்மை மிகுந்தவர்கள் என்று கூறியுள்ளார்.

மேலும் நீங்கள் வில்லனாக நடிப்பதாக இருந்தால் ரஜினி, கமல் தவிர யார் ஹீரோவாக நடிக்கும் படத்தில் வில்லனாக நடிப்பீர்கள் என்ற கேள்விக்கு பதிலளித்த ஆதி, 'தல அஜித்' என்று பதில் கூறியுள்ளார்.

மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசனுக்கு பின்னர் அனைவரும் அஜித் படத்தில் நடிக்கவே அனைவரும் விருப்பமாக உள்ளனர் என்றும் அவர் மற்றொரு கேள்விக்கு பதிலளித்துள்ளார்.

More News

ஹாலிவுட்டுக்கு செல்லும் ஜெயம் ரவி திரைப்படம்

தமிழின் முதல் ஜோம்பி திரைப்படமான 'மிருதன்' திரைப்படம் கடந்த வெள்ளியன்று ரிலீஸ் ஆகி மாபெரும் வரவேற்பை...

4 மணி நேரம் மேக்கப் போட செலவழித்த 'ரெமோ' சிவா

'ரஜினிமுருகன்' சூப்பர் ஹிட் படத்தை அடுத்து தற்போது 'ரெமோ' என்ற படத்தில் நடித்து வரும் சிவகார்த்திகேயன் இதுவரை இல்லாத...

தர்மதுரை இறுதிக்கட்ட படப்பிடிப்பில் தமன்னா

'நானும் ரெளடிதான், 'சேதுபதி' என இரண்டு தொடர் சூப்பர் ஹிட் படங்களில் நடித்த விஜய்சேதுபதி தேசிய விருது இயக்குனர் சீனுராமசாமியின்..

அனிருத்தின் 'ரம்'முக்கு ஐஸ்வர்யா தனுஷ் வாழ்த்து

கடந்த சில நாட்களுக்கு முன் 'பீப்' பாடல் விவகாரத்தில் சிக்கியிருந்த அனிருத் கிட்டத்தட்ட அந்த பிரச்சனையில் இருந்து வெளியே வந்துள்ள...

புத்திர சோகம் -- வாழ்வை சிதைக்கும் பேரிடர் : விவேக் உருக்கம்

இணையதள பத்திரிகைக்காக என்னை மனம்திறக்கச் சொல்கிறார்கள். அதுவும் சமீபத்தில் மறைந்த… என் மனமெல்லாம் நிறைந்த என் மகன் பற்றி...