சபரிமலையில் பரபரப்பை ஏற்படுத்திய பிரபல மாடல் அழகி கைது
Send us your feedback to audioarticles@vaarta.com
சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என சுப்ரீம் கோர்ட் சமீபத்தில் தீர்ப்பளித்தது. ஆனால் இந்த தீர்ப்பை தவறாக புரிந்து கொண்ட ஒருசில பெண்கள் விரதம் இருக்காமல், இருமுடியில் ஆப்பிள், ஆரஞ்சு ஆகியவற்றை கட்டி கோவிலுக்கு எடுத்து சென்றனர். அவர்களில் ஒருவர் பிரபல மாடல் அழகி ரெஹானா பாத்திமா
இவர் சபரிமலையில் உள்ள சன்னிதியை நெருங்கிய போது ஐயப்ப பக்தர்களின் கடும் எதிர்ப்பு காரணமாக தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டார். மேலும் ரெஹானாவையும் அவரது குடும்பத்தினரை கேரள மாநில முஸ்லிம் ஜமாஅத் தள்ளிவைத்தது
இந்த நிலையில் இதுகுறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை ரெஹானா தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்ததை அடுத்து அவர் மீது மத உணர்வுகளை வைத்து பிரிவினையை ஏற்படுத்தும் வகையிலான பிரிவின்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சபரிமலை ஆச்சார சம்ரக்ஷனா சமிதி அமைப்பின் செயலாளர் பத்மகுமார் என்பவர் புகார் அளித்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் இந்திய கிரிமினல் சட்டம் 153A-வின் கீழ் ரெஹானா மீது வழக்குப்பதிவு செய்திருந்த போலீசார் இன்று கைது செய்துள்ளனர். முன்னதாக ரெஹாவின் முன் ஜாமீன் மனு நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com