மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு உள் இட ஒதுக்கீடு… தமிழக அரசின் அதிரடி!!!

 

MBBS, BDS உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு (நீட் தேர்வு) குறித்த விவாதம் தமிழகத்தில் தொடர்ந்து சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவத்தில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திற்காக தமிழக அரசு புதிய திட்டம் ஒன்றை அமல்படுத்த உள்ளது. அரசு பள்ளி மாணவர்களின் நிலைமையை கருத்தில் கொண்டு அவர்களுக்கு சேர்க்கையில் உள் இட ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு முடிவு செய்திருக்கிறது.

கடந்த ஜுலை மாதம் மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு 7.5% உள் இட ஒதுக்கீடு வழங்க தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டது. இதனால் தமிழகத்தின் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் மட்டுமல்லாது தனியார் மெட்ரிக் பள்ளிகளில் கட்டாயக்கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பயின்று பிறகு அரசு பள்ளிகளில் படித்து தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கும் இந்த உள் இட ஒதுக்கீடு பொருந்தும் எனவும் தெரிவிக்கப் பட்டு இருந்தது.

இத்திட்டத்திற்காக தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் பெறப்பட்ட ஒப்புதலை அடுத்து விரைவில் அவசரச் சட்டம் பிறப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தமிழக அரசு தெரிவித்து இருந்தது. அதுவும் நடப்பு ஆண்டிலேயே 7.5% உள் இட ஒதுக்கீட்டின் கீழ் மாணவர் சேர்க்கை நடைபெற தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

அந்த வகையில் தமிழக அரசுப் பள்ளிகளில் பயிலக்கூடிய மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5% உள் இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா இன்று பேரவையில் தாக்கல் செய்யப்பட இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த மசோதாவை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தமிழக அமைச்சரவையில் இன்று தாக்கல் செய்யவிருக்கிறார். இந்த ஏற்பாட்டினால் தமிழகத்தில் மருத்துவப் படிப்புகளில் சேரும் அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் எனவும் எதிர்ப்பார்க்கப் படுகிறது.

More News

நடிகர் சூர்யா கல்வி அமைச்சராக வேண்டும்: தமிழ் நடிகர் விருப்பம்!

நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாடே குரல் கொடுத்துக் கொண்டு வந்தாலும் நடிகர் சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட ஒரே ஒரு அறிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கைலாசா நாட்டு பெண்களை வரன் கேட்கும் நம்ம ஊரு 90 கிட்ஸ்… வைரல் சம்பவம்!!!

நித்யானந்தா தான் உருவாக்கிய கைலாசா நாட்டை பற்றிய அறிவிப்பை வெளியிட்டதில் இருந்தே அங்கு செல்ல வேண்டும் என்ற ஆர்வத்தைப் பலரும் கிண்டலாக வெளிப்படுத்தி வருகின்றனர்.

கனடா பிரதமரையும் விட்டுவைக்காத 'இந்தி தெரியாது போடா': நெட்டிசன்களின் கைவரிசை!

'இந்தி தெரியாது போடா' மற்றும் 'I am a தமிழ் பேசும் இந்தியன்' போன்ற வாசகங்கள் அடங்கிய டீ-ஷர்ட்டுகளை கடந்த சில நாட்களாக திரையுலக பிரமுகர்கள் அணிந்து வைரலாகி வருகின்றனர் என்பது தெரிந்ததே 

கொரோனாவுக்கு பலியான விஜய் படத்தில் அறிமுகமான நடிகர்: திரையுலகினர் இரங்கல்

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களும்

யார் இந்த நவோமி ஒசாகா… சாதித்தது என்ன???

சமீபத்தில் நடைபெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில் நவோமி ஒசாகா(22)  சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றார்.