மகள்களுடன் ஆக்ஷன் கிங் அர்ஜுன் எங்கே சென்றிருக்கிறார் தெரியுமா? வைரல் வீடியோ..!

  • IndiaGlitz, [Wednesday,April 05 2023]

ஆக்ஷன் கிங் அர்ஜுன் தனது மகள்களுடன் கேரளாவில் உள்ள கபினி அணை அருகே சென்ற நிலையில் அது குறித்த புகைப்படங்கள் வீடியோக்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்தவர் ஆக்ஷன் கிங் அர்ஜுன் என்பதும் இவர் கடந்த 80கள், 90களில் மிகப்பெரிய வெற்றி படங்களை கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அவர் விஜய் நடித்து வரும் ’லியோ’ பட ஒரு சில படங்களில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் ஆக்ஷன் கிங் அர்ஜுன் கடந்த 1988ம் தேதி நிவேதிதா என்ற கன்னட நடிகையை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஐஸ்வர்யா மற்றும் அஞ்சனா ஆகிய இரண்டு மகள்கள் உள்ளனர். ஐஸ்வர்யா அர்ஜுன் நடிகையாக இருக்கிறார் என்பதும் அஞ்சனா தொழிலதிபராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஐஸ்வர்யா அர்ஜுன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது தந்தை மற்றும் சகோதரியுடன் கேரள மாநிலத்தில் உள்ள கபினி அணைக்கு சுற்றுலா சென்றதன் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டுள்ளார். இதில் ஆக்சன்கிங் அர்ஜுன் மற்றும் அவரது இரண்டு மகள்களும் ஜாலியாக இருக்கும் புகைப்படங்கள் உள்ள நிலையில் இந்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன. குறிப்பாக அர்ஜுன் மாட்டு வண்டியை ஓட்ட அதில் அவரது இரண்டு மகள்கள் செல்லும் வீடியோவுக்கு லைக் குவிந்து வருகிறது.

More News

சன் டிவி 90s தொகுப்பாளினி ரத்னாவிற்கு இவ்வளவு பெரிய மகளா? 

சன் டிவி செய்தி வாசிப்பாளராக பல வருடங்களாக இருந்து வரும் ரத்னாவின் மகன், மகள் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகின்றன. 

10 வருடங்களுக்கு முன் பிக்பாஸ் பாவனிரெட்டி எப்படி இருந்தார் தெரியுமா? கிளாமர் புகைப்படங்கள் வைரல்..!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான தொலைக்காட்சி நடிகை பாவனிரெட்டியின் 10 வருடங்களுக்கு முந்தைய புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகின்றன. 

30 மில்லியன் பார்வையாளர்களை கடந்த 'அகிலன்': வித்தியாசமான முறையில் விளம்பரப்படுத்திய ஜீ5 

இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமாக விளங்கும் ஜீ5 ஓடிடி தளத்தின் சமீபத்திய வெளியீடான 'அகிலன்' படத்தின் 30 மில்லியன் பார்வை நிமிடங்களை  கொண்டாடும் விதமாக, ஒரு வித்தியாசமான விளம்பர

ரஜினிகாந்த் - லோகேஷ் கனகராஜ் திடீர் சந்திப்பு.. 'தலைவர் 171' பட அறிவிப்பா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் லோகேஷ் கனகராஜ் ஆகிய இருவரும் திடீரென சந்தித்து   உள்ளதாகவும் இருவரும் ஒரு படத்தில் இணைய இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இன்று முதல் சென்னையில் 'லியோ' படப்பிடிப்பு.. யார் யாரெல்லாம் கலந்து கொள்கிறார்கள் தெரியுமா?

 விஜய் நடித்து வரும் 'லியோ' படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு இன்று முதல் சென்னையில் நடைபெற உள்ளதை அடுத்து இந்த படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் நட்சத்திரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.