close
Choose your channels

ஆக்சன் கிங் அர்ஜுன் கதையில் துருவா சர்ஜாவின் மாஸ் நடிப்பில் மார்டின் டீசர் !!!

Saturday, February 25, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

வாசவி எண்டர்பிரைசஸ் சார்பில் தயாரிப்பாளர் உதய் K மேத்தா தயாரிப்பில், ஆக்சன் கிங் அர்ஜுன் கதையில், இயக்குநர் AP அர்ஜுன் இயக்கத்தில், 'ஆக்சன் பிரின்ஸ்' துருவா சர்ஜா நடிப்பில், பிரமாண்டமான பான் இந்திய திரைப்படமாக உருவாகியுள்ளது 'மார்டின்' திரைப்படம்.

இந்திய அளவில் ரசிகர்களிடம் பெரும் ஆவலை தூண்டியிருக்கும் இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா, பிப்ரவரி 23 ஆம் தேதி, பெங்களூர் ஓரியன் மாலில் கோலாகலமாக நடைபெற்றது.

இவ்விழாவினில், தயாரிப்பாளர் உதய் K மேத்தா, ஆக்சன் கிங் அர்ஜீன், இயக்குநர் AP அர்ஜீன், நாயகன் துருவா சர்ஜா, நாயகி வைபவி சாண்டில்யா, அன்வேஷி ஜெயின் உட்பட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

பெரிய பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாகியுள்ள இப்படம் அனைவரையும் மகிழ்விக்கும் வகையில் ஆக்சன் அதகளமாக உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் டீசர், திரை கொள்ளாத ஆக்சன் காட்சிகளின் பிரமாண்டத்தையும், துருவா சர்ஜாவின் கதாப்பாத்திரத்தையும், படத்தை பற்றிய சிறு அறிமுகத்தை தருவதாகவும் அமைந்திருந்தது. இவ்விழாவில் வெளியிடப்பட்ட டீசரை ரசிகர்கள் உற்சாக கரவொலியுடன் வரவேற்றனர்.

வெளியான நொடியிலிருந்து இணையம் முழுக்க தீயாகவ பரவி வரும் டீசரை, இந்தியா முழுக்கவே ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்க்ள். தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் உருவான இப்படத்தின் டீசர் வெளியான நாளிலிருந்து இன்றுவரை டிரெண்டிங்கில் இருந்து வருவது குறிப்பிடதக்கது.

துருவா சர்ஜா, வைபவி சாண்டில்யா, அன்வேஷி ஜெயின், சிக்கண்ணா, மாளவிகா அவினாஷ், அச்யுத் குமார், நிகிதின் தீர், நவாப் ஷா, ரோஹித் பதக் உள்பட பலர் நடிப்பில் உருவான இந்த படத்தை AP அர்ஜுன் இயக்கியுள்ளார். ஆக்சன் கிங் அர்ஜுன் கதையில் மணி சர்மா இசையில் சத்யா ஹெக்டே ஒளிப்பதிவில் கே எம் பிரகாஷ் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகி வருகிறது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment