'விடாமுயற்சி' படத்தின் கிளைமாக்ஸ் முடிந்தது.. ரிலீஸ் தேதி இதுதான்: ஆக்சன் கிங் அர்ஜூன்

  • IndiaGlitz, [Monday,September 16 2024]

அஜித் நடிப்பில் உருவாகும் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்ததாக கூறப்பட்ட நிலையில், இந்த படம் தீபாவளிக்கு வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், படப்பிடிப்பு மற்றும் தொழில்நுட்ப பணிகள் முடிவடையாததால், இந்த படம் தீபாவளியில் வெளியாகாமல், சில மாதங்கள் தள்ளி போகும் என்று செய்திகள் வெளியாகின.

இந்த சூழலில், நேற்று நடைபெற்ற சினிமா விழாவில் கலந்து கொண்ட ஆக்சன் கிங் அர்ஜுன், விடாமுயற்சி படத்தை பற்றிய தகவல்களை பகிர்ந்தார். இப்போதுதான் 'விடாமுயற்சி' படத்தின் கிளைமாக்ஸ் படப்பிடிப்பில் கலந்து கொண்டு வந்துள்ளேன். கிளைமாக்ஸ் படப்பிடிப்பு முடிந்துவிட்டது, மேலும் இந்த படம் டிசம்பர் மாதத்தில் வெளியாகும், என்று அவர் தெரிவித்தார். இதன் அடிப்படையில், கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு விடாமுயற்சி திரைப்படம் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், விடாமுயற்சி திரைப்படம் கிறிஸ்துமஸ் விடுமுறையில் வெளியாக இருப்பதால், அஜித் நடித்து வரும் மற்றொரு படமான குட் பேட் அக்லி திரைப்படம், பொங்கல் ரிலீஸுக்கு திட்டமிடப்பட்டிருந்த நிலையில், தற்போது அது மே மாதத்திற்கு தள்ளி வைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

அஜித், அர்ஜூன், த்ரிஷா, ரெஜினா, ஆரவ் உள்பட பலர் நடித்திருக்கும் ’விடாமுயற்சி’ படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. மகிழ் திருமேனி இயக்கத்தில் நீரவ் ஷா மற்றும் ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவில் ஸ்ரீகாந்த் படத்தொகுப்பில், அனிருத் இசையில் இந்த படம் உருவாகி வருகிறது.

More News

தனுஷ் இயக்கும் 4வது படத்தின் டைட்டில் இதுவா? யார் யாரெல்லாம் நடிக்கின்றனர்?

தனுஷ் இதுவரை மூன்று படங்கள் இயக்கியுள்ள நிலையில் அவர் இயக்க இருக்கும் நான்காவது படத்தின் டைட்டில் மற்றும் அதில் நடிக்கும் நட்சத்திரங்கள் குறித்த தகவல் கசிந்துள்ளது.

'வேட்டையன்' படத்தின் வீடியோவை வெளியிட்ட லைகா... ரித்திகா சிங் கேரக்டர் அறிவிப்பு..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'வேட்டையன்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, தற்போது வேகமாக தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்படம் உலகமெங்கும்

அமானுஷ்ய உலகின் ரகசியங்கள்: ஜீவிதா சுரேஷ்குமார் பேசுகிறார்!

ஆன்மீகக்ளிட்ஸ் சேனலில் பிரபல எழுத்தாளர் மற்றும் ஆன்மீக ஜோதிட ஆராய்ச்சியாளர் ஜீவிதா சுரேஷ்குமார் அவர்கள் அமானுஷ்யம் தொடர்பான பல கேள்விகளுக்கு விடை அளித்துள்ளார்.

புதிய  புரொஜெக்ட்  .. புதிய ஸ்கிரிப்ட்: பிரபல இசையமைப்பாளருடன் மீண்டும் இணையும் செல்வராகவன்..

பிரபல இயக்குனர் செல்வராகவன் பெரும்பாலும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவுடன் இணைந்து பணிபுரிந்த நிலையில் இரண்டு படங்களில் மட்டுமே அவர் ஜிவி பிரகாஷ் உடன் பணிபுரிந்தார்.

சித்தார்த் - அதிதி ராவ் திருமணம்: இன்ஸ்டாவில் வைரலாகும் புகைப்படங்கள்..!

நடிகர் சித்தார்த் மற்றும் நடிகை அதிதி ராவ் ஹைத்ரி திருமண நிச்சயதார்த்தம் சில மாதங்களுக்கு முன் நடந்த நிலையில் இன்று இருவருக்கும் திருமணம் நடந்துள்ள