close
Choose your channels

'விடாமுயற்சி' படத்தின் கிளைமாக்ஸ் முடிந்தது.. ரிலீஸ் தேதி இதுதான்: ஆக்சன் கிங் அர்ஜூன்

Monday, September 16, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித் நடிப்பில் உருவாகும் "விடாமுயற்சி" படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்ததாக கூறப்பட்ட நிலையில், இந்த படம் தீபாவளிக்கு வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், படப்பிடிப்பு மற்றும் தொழில்நுட்ப பணிகள் முடிவடையாததால், இந்த படம் தீபாவளியில் வெளியாகாமல், சில மாதங்கள் தள்ளி போகும் என்று செய்திகள் வெளியாகின.

இந்த சூழலில், நேற்று நடைபெற்ற சினிமா விழாவில் கலந்து கொண்ட ஆக்சன் கிங் அர்ஜுன், "விடாமுயற்சி" படத்தை பற்றிய தகவல்களை பகிர்ந்தார். "இப்போதுதான் 'விடாமுயற்சி' படத்தின் கிளைமாக்ஸ் படப்பிடிப்பில் கலந்து கொண்டு வந்துள்ளேன். கிளைமாக்ஸ் படப்பிடிப்பு முடிந்துவிட்டது, மேலும் இந்த படம் டிசம்பர் மாதத்தில் வெளியாகும்," என்று அவர் தெரிவித்தார். இதன் அடிப்படையில், கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு "விடாமுயற்சி" திரைப்படம் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், "விடாமுயற்சி" திரைப்படம் கிறிஸ்துமஸ் விடுமுறையில் வெளியாக இருப்பதால், அஜித் நடித்து வரும் மற்றொரு படமான "குட் பேட் அக்லி" திரைப்படம், பொங்கல் ரிலீஸுக்கு திட்டமிடப்பட்டிருந்த நிலையில், தற்போது அது மே மாதத்திற்கு தள்ளி வைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

அஜித், அர்ஜூன், த்ரிஷா, ரெஜினா, ஆரவ் உள்பட பலர் நடித்திருக்கும் ’விடாமுயற்சி’ படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. மகிழ் திருமேனி இயக்கத்தில் நீரவ் ஷா மற்றும் ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவில் ஸ்ரீகாந்த் படத்தொகுப்பில், அனிருத் இசையில் இந்த படம் உருவாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment