விஜய்யின் 'லியோ' கதை குறித்து முதல்முறையாக மனம் திறந்த அர்ஜூன்..!
- IndiaGlitz, [Friday,February 10 2023]
தளபதி விஜய் நடித்துவரும் ‘லியோ’ படத்தின் கதை குறித்து இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்கும் ஆக்சன் கிங் அர்ஜுன் முதல் முறையாக மனம் திறந்து தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
தளபதி விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘லியோ’. இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் இந்த படத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜூன் இணைந்துள்ளார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில் முதல் முறையாக விஜய் மற்றும் அர்ஜுன் இணைந்து நடிக்க உள்ளதால் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த படம் குறித்தும் இந்த படத்தின் கதை குறித்தும் விஜய் குறித்தும் நடிகர் அர்ஜுன் கூறிய போது, ‘லியோ’ கதை மீது எனக்கு நம்பிக்கை அதிகமாகவே உள்ளது, இந்த திரைப்படத்தில் லோகேஷ் என்னை வித்தியாசமான ஆக்சன் தோற்றத்தில் காண்பிக்கப் போகிறார் என்று தெரிவித்தார். மேலும் விஜய் குறித்து அவர் கூறியபோது,ம் ‘விஜய் மிகப்பெரிய நடிகர், அவருடன் இணைந்து நடிப்பது புதிய அனுபவமாக இருக்கும்’ என்று தெரிவித்துள்ளார்.