படங்கள் தோல்வி, கையில் பணம் இல்லை, அம்மா வீட்டை விற்று செய்த உதவி: அர்ஜூன் நெகிழ்ச்சி!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சர்வைவர் என்ற நிகழ்ச்சியை ஆக்சன் கிங் அர்ஜுன் அவர்கள் சுவாரசியமாகவும் விறுவிறுப்பாகவும் தொகுத்து வழங்கி வருகிறார் என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் இன்றைய புரமோ வீடியோவில் அர்ஜுன் தான் சினிமா காலங்களில் பட்ட கஷ்டத்தையும் அப்போது அவரது அம்மா வீட்டை விற்று பணம் அனுப்பியதையும் போட்டியாளர்களிடம் பகிர்ந்துகொண்டார்.
போட்டியாளர்கள் மிகவும் சுறுசுறுப்புடன் செயல்பட வேண்டும் என்பதற்காக அவ்வப்போது மோட்டிவேஷன் கூறிவரும் ஆக்சன் கிங் அர்ஜுன் இன்று போட்டியாளர்களிடம் தனது வாழ்க்கையில் நடந்த நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்றை கூறினார்.
தமிழ் சினிமாவில் தான் ஒரு நல்ல இடத்தில் இருந்ததாகவும் ஆனால் தனக்கே தெரியாமல் சில படங்கள் தோல்வி அடைந்தது என்றும் அதன் பிறகு தானே படங்களை தயாரித்து இயக்க ஆரம்பித்ததாகவும் தெரிவித்திருந்தார். அவ்வாறு ஒரு படம் இயக்கிக் கொண்டிருக்கும் போது கிளைமாக்ஸ் சண்டை காட்சி மட்டும் படமாக்கப்பட வேண்டி நிலை இருந்தது என்றும், தன்னிடம் பணம் இல்லை என்றும், தனது வீட்டை விற்று அனைத்து பணத்தையும் செலவழித்து விட்டதாகவும் அப்போது அவரது அம்மா பெங்களூரில் இருந்த ஒரு சிறிய வீட்டை விற்று தனக்கு பணம் அனுப்பியதாகவும் அவர் நெகிழ்ச்சியுடன் கூறினார்.
இந்த வீடியோவை பார்க்கும் போது இன்றைய நிகழ்ச்சி சுவராஸ்யமாகவும் நெகிழ்ச்சியாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Action KING ஆன வரலாறு.
— Zee Tamil (@ZeeTamil) September 29, 2021
Survivor | 29th Sep | Promo 2 | Daily 9.30 pm#SurvivorTamil #Survivor #ZeeTamil #சர்வைவர் #ActionKingArjun @akarjunofficial pic.twitter.com/5301v1v5N8
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments