நடிகர் அர்ஜுனின் 2-வது மகளைப் பார்த்துள்ளீர்களா? வைரலாகும் நீச்சல் உடை புகைப்படம்

  • IndiaGlitz, [Wednesday,July 05 2023]

தமிழ் சினிமாவில் ஆக்ஷன் கிங் என்று ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றுவரும் நடிகர் அர்ஜுனின் முதல் மகள் ஐஸ்வர்யா ஏற்கனவே ஒருசில திரைப்படங்களில் நடித்து ரசிகர்களிடையே அறிமுகமான நிலையில் தற்போது அவருடைய இரண்டாவது மகள் புகைப்படம் இணையத்தில் வைரலை ஏற்படுத்தி வருகிறது.

90 களில் வெளிவந்த தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனாக இருந்தவர் நடிகர் அர்ஜுன். ஆக்ஷன் விஷயங்களில் படு அசத்தலாக நடித்து ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற இவர் பல ஹிட் திரைப்படங்களைக் கொடுத்துள்ளார். ஹீரோ கதாபாத்திரத்தை தவிர வில்லன் கதாபாத்திரத்திலும் கலக்கிய இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் என்று ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமாவிலும் பிரபலமாக இருந்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த 1988 இல் நிவேதிதா என்பவரை திருமணம் செய்து கொண்ட நடிகர் அர்ஜுனுக்கு ஐஸ்வர்யா, அஞ்சனா என்று இரு மகள்கள் உள்ளனர். இதில் முதல் மகள் ஐஸ்வர்யா ஏற்கனவே நடிகர் விஷால் நடிப்பில் வெளியான ‘பட்டத்து யானை’ திரைப்படத்திலும் ‘சொல்லிவிடவா’ எனும் திரைப்படத்திலும் நடித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து சினிமாவில் தலைக்காட்டாமல் இருந்துவரும் ஐஸ்வர்யா சமீபத்தில் காமெடி மற்றும் குணச்சித்திர நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதியைக் காதலித்து வருவதாகவும் இவர்களுடைய திருமணம் விரைவில் நடக்கும் என்பதும் போன்ற தகவல்கள் வெளியாகி இருந்தன.

இப்படி முதல் மகள் ஐஸ்வர்யா அர்ஜுன் குறித்து தமிழ் ரசிகர்கள் ஏற்கனவே அறிந்துள்ளனர். ஆனால் இரண்டாவது மகள் அஞ்சனா சினிமா பக்கம் தலைக்காட்டாமல் ஹைதராபாத்தில் ஹேண்ட்பேக் நிறுவனம் ஒன்றை கடந்த ஆண்டு துவங்கி தற்போது தொழில் அதிபராக வலம் வருகிறார்.

மேலும் இவருடைய ஹேண்ட்பேக் நிறுவனத்தின் பொருட்கள் அனைத்தும் விலங்குகளின் தோலால் செய்யப்படாமல் பழத்தோலினால் செய்யப்பட்டு வருவதாகவும் அதற்கு ‘சார்ஜா’ என்று பெயர் வைத்திருப்பதாகவும் தகவல்கள் இணையத்தில் வைரலாகி வந்தன.

இந்நிலையில் சமூகவலைத் தளப்பக்கத்தில் ஆக்டிவாக இருந்துவரும் அஞ்சனா அர்ஜுன் தற்போது இயற்கை எழில் கொஞ்சும் நதிக்கரையில் நின்றவாறு நீச்சல் உடையணிந்துள்ள புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இதைப் பார்த்த ரசிகர்கள் நடிகர் அர்ஜுனிற்கு இவ்வளவு அழகான மகள் இருக்கிறாரா? ஒருவேளை சினிமாவிற்கு எண்ட்ரி கொடுப்பதற்காகவே இப்படி புகைப்படம் வெளியிட்டு உள்ளாரா என்பது போன்ற கேள்விகளை எழுப்பி புகைப்படங்களுக்கு லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.
 

More News

பிகினியில் புதுமை செய்த பிரபல நடிகை? இணையத்தில் தீயாய் பரவும் ஹாட் புகைப்படம்!

தமிழ் சினிமாவில் பிரபலமாக இருந்துவரும் நடிகை ஒருவர் கடற்கரையில் பென்குயின் போன்று பிகினி அணிந்து நின்றிருக்கும் புகைப்படம்

இந்த வாரம் 4 தமிழ் திரைப்படங்கள் ரிலீஸ்.. ஓடிடி ரசிகர்களுக்கு கொண்டாட்டம்..!

திரையரங்குகளில் வெளியான திரைப்படங்கள் ஒவ்வொரு வாரமும் ஓடிடியில் வெளியாகி வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் இந்த வாரம் 4 தமிழ் திரைப்படங்கள் வெளியாக இருப்பது

ஒரே படத்தில் விஜய்-தனுஷ்? பிரபல இயக்குனரின் முயற்சி பலிக்குமா?

விஜய் நடிக்கும் படத்தில் நடிகர் தனுஷை இணைக்க பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் முயற்சித்து வருவதாகவும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

விஜய்யை அடுத்து நடிப்புக்கு பிரேக் கொடுக்கும் முன்னணி நடிகை.. இதுதான் காரணமா?

நடிகர் விஜய், வெங்கட் பிரபு இயக்கும் 'தளபதி 68' படத்தை முடித்தவுடன் மூன்று ஆண்டுகள் நடிப்புக்கு பிரேக் எடுக்க இருப்பதாகவும் அவர் அரசியல் களப்பணிகளில் இறங்க திட்டமிடப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

சாண்டி அடுத்த படத்தில் இணைந்த 2 திரையுலக மேதைகள்.. எகிறும் எதிர்பார்ப்பு..!

தமிழ் திரையுலகின் பிரபல டான்ஸ் மாஸ்டர் சாண்டி ஏற்கனவே ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ள நிலையில் தற்போது ஹீரோவாக அவர் நடித்து வரும் திரைப்படத்தில் இரண்டு திரை உலக மேதைகள் இணைந்துள்ள