பாட்டில்கேப் சேலஞ்சில் தமிழ் ஆக்சன் நடிகர்
Send us your feedback to audioarticles@vaarta.com
இணையத்தில் அவ்வப்போது ஒரு சேலஞ்ச் வைரலாகி வருவது தெரிந்ததே. அந்த வகையில் ஐஸ் பக்கெட் சேலஞ்ச் , கிகி சேலஞ்ச் உள்பட பல சேலஞ்ச்சுக்கள் வைரலாகியுள்ள நிலையில் தற்போது உலக அளவில் வைரலாகி வரும் புதிய சேலஞ்ச் பாட்டில்கேப் சேலஞ்ச்.
இந்த சேலஞ்ச்சின்படி பாட்டிலில் உள்ள மேல்மூடியை மட்டும் காலால் உதைத்து வெளியேற்ற வேண்டும். இந்த சேலஞ்சில் ஹாலிவுட் நடிகர்களான 'ஜேசன் ஸ்டாதம், லீவிஸ் டான், பாலிவுட் நடிகர் அக்சயகுமார் உள்ளிட்ட பலர் இந்த சேலஞ்சை செய்து வருகின்றனர். இதுகுறித்த வீடியோவும் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த நிலையில் கோலிவுட்டின் ஆக்சன்கிங் அர்ஜூனும் தற்போது இந்த சேலஞ்சில் கலந்து கொண்டு துல்லியமாக பாட்டிலின் மூடியை மட்டும் காலால் எட்டி உதைத்துள்ளார். இந்த வீடியோவும் தற்போது வைரலாகி வருகிறது.
I couldn't resist ??#BottleCapChallenge
— Akshay Kumar (@akshaykumar) July 3, 2019
Inspired by my action idol #JasonStatham, I will repost/retweet the Best I see, come on Guys and Girls get your Bottle out and your Legs in the Air, Let's Do This ???? #FitIndia #WednesdayMotivation pic.twitter.com/RsDYDWhS5n
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments