ஆக்சன்கிங் அர்ஜூன் பட நாயகிக்கு திருமணம்.. வைரலாகும் நிச்சயதார்த்த வீடியோ!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஆக்சன் கிங் அர்ஜுன் உள்பட ஒரு சில திரையுலக பிரபலங்களுடன் நடித்த நடிகைக்கு திருமணம் நிச்சயதார்த்தம் நடந்துள்ள நிலையில் அதுகுறித்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
கன்னட திரையுலகின் முன்னணி நடிகையாக இருந்த நடிகை ஹரிப்பிரியா தமிழில் ’கனகவேல் காக்க’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பின் அவர் ஆக்ஷன் கிங் அர்ஜுன் நடித்த ’வல்லக்கோட்டை’ உள்பட ஒரு சில தமிழ் படங்களில் நடித்தார்.
இந்த நிலையில் நடிகை ஹரிபிரியாவுக்கு 30 வயதுக்குமேல் ஆகிவிட்ட நிலையில் அவருக்கு எப்போது திருமணம் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்த நிலையில் இந்த கேள்விகளுக்கு பதிலாக அவருடைய நிச்சயதார்த்த நிகழ்ச்சி நடந்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக கன்னட நடிகர் வசிஷ்டா என்பவரை டேட்டிங் செய்து கொண்டிருந்த நடிகை ஹரிப்பிரியா தற்போது திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளார். இதனை அடுத்து இருதரப்பு பெற்றோர்களும் ஹரிபிரியா - வசிஷ்டா திருமண நிச்சயதார்த்தத்தை சமீபத்தில் நடத்தி முடித்துள்ளனர். இதனை அடுத்து விரைவில் இவர்களது திருமணம் நடைபெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் நடிகை ஹரிப்பிரியா தனது சமூக வலைதளத்தில் திருமண நிச்சயதார்த்த வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டுள்ள நிலையில் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com