தமிழக முதல்வரை மனைவியுடன் சென்று சந்தித்த ஆக்சன் கிங் அர்ஜுன்.. வைரல் புகைப்படம்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களை ஆக்சன் கிங் அர்ஜுன் தனது மனைவியுடன் சென்று சந்தித்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
ஆக்ஷன் கிங் அர்ஜுன் மகள் ஐஸ்வர்யாவுக்கும் குணச்சித்திர நடிகர் தம்பி ராமையா மகன் உமாபதிக்கும் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் வரும் ஜூலை மாதம் 10ஆம் தேதி சென்னையில் திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் அர்ஜுனுக்கு சொந்தமான தோட்டத்தில் தான் இந்த திருமணம் நடைபெற இருப்பதாகவும் திருமண ஏற்பாடுகள் பிரம்மாண்டமாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த திருமணத்திற்கு அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் உள்ளிட்ட பலருக்கும் தற்போது அழைப்பிதழ் வைக்கும் பணி தொடங்கியுள்ளது.
இந்நிலையில் முதல் அழைப்பிதழை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் மற்றும் அவரது மனைவி துர்கா ஸ்டாலின் ஆகியோர்களுக்கு ஆக்சன் கிங் அர்ஜுன் தனது மனைவியிடம் சென்று அளித்துள்ளார். அப்போது தம்பி ராமையா மற்றும் அவரது மனைவியும் உடன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
அர்ஜுன் தனது மகளின் திருமணத்தை மிகவும் பிரம்மாண்டமாக நடத்த முடிவு செய்திருப்பதாகவும் ஒரு சில கோடிகள் இந்த திருமணத்திற்காகவே செலவு செய்ய திட்டமிடப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments