சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தில் ஆக்சன் கிங் அர்ஜூன்

  • IndiaGlitz, [Friday,November 02 2018]

சிவகார்த்திகேயன் தற்போது ராஜேஷ் எம் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே. இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் இதனையடுத்து அவர் 'இன்று நேற்று நாளை' இயக்குனர் ரவிகுமார் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இந்த இரண்டு படங்களும் சிவகார்த்திகேயனின் 13வது மற்றும் 14வது படங்களாக உருவாகவுள்ளன.

இந்த நிலையில் சிவகார்த்திகேயனின் 15வது படத்தை 'இரும்புத்திரை' இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கவுள்ளதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். தற்போது இந்த படத்தில் ஆக்சன்கிங் அர்ஜூன் இணைந்துள்ளார். பி.எஸ்.மித்ரனின் முதல் படமான 'இரும்புத்திரை'யிலும் அர்ஜூன் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சிவகார்த்திகேயன் - அர்ஜூன் முதன்முதலாக இணையும் இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார். 24 ஏம் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவும் ,ரூபன் படத்தொகுப்பு பணியும் செய்யவுள்ளனார். இந்த படத்தின் நாயகி உள்பட மற்ற நடிகர், நடிகையர் தேர்வு நடைபெற்று வருவதாகவும் விரைவில் இதுகுறித்த செய்தி வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.

More News

தீபாவளி ரேஸில் திடீரென இணைந்த தினேஷ் படம்

வரும் தீபாவளி திருநாளான நவம்பர் 6ஆம் தேதி தளபதி விஜய் நடித்த சர்கார் திரைப்படம் உலகம் முழுவதும் குறிப்பாக தமிழகத்தில் பெருவாரியான திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

காயத்ரி ரகுராம் கர்ப்பமா?

பிக்பாஸ் 1 நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரும் நடிகையும் நடன இயக்குனருமான காயத்ரி ரகுராம், மத்தியில் ஆட்சி செய்து வரும் பாஜகவில் முக்கிய பொருப்பில் உள்ளார் என்பது தெரிந்ததே

விஜய் ஆண்டனி - அருண்விஜய் படத்தின் டைட்டில் அறிவிப்பு

விஜய் ஆண்டனி மற்றும் அருண்விஜய் ஆகிய இருவரும் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ள திரைப்படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக்கை இன்று மாலை உலக நாயகன் கமல்ஹாசன் அறிவிக்கவுள்ளார்

'2.0' வில்லனாக கமல் ஏன் நடிக்கவில்லை? ஷங்கர் விளக்கம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கிய '2.0' திரைப்படம் வரும் 29ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது.

சிவகார்த்திகேயனின் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு

சிவகார்த்திகேயன் தயாரித்து வரும் 'கனா' படம் குறித்த முக்கிய அறிவிப்பு இன்று மாலை 5.55 மணிக்கு வரும் என்ற செய்தியை பார்த்தோம். அந்த வகையில் இதுகுறித்த அறிவிப்பை சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார்