ஜெயம் ரவியின் அடுத்த படத்தில் ஆக்சன் கிங் அர்ஜூன்:

  • IndiaGlitz, [Monday,August 26 2019]

ஆக்சன் கிங் அர்ஜுன் சமீபத்தில் விஷால் நடித்த 'இரும்புத்திரை' மற்றும் விஜய் ஆண்டனி நடித்த 'கொலைகாரன் ஆகிய படங்களில் நடித்த நிலையில் தற்போது ஜெயம்ரவி நடிக்கும் அடுத்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது

ஜெயம் ரவி நடித்த 'கோமாளி' திரைப்படம் மிகப் பெரிய வெற்றி அடைந்ததை அடுத்து அவர் தற்போது 'ஜன கன மன' என்ற படத்தில் நடித்து வருகிறார். 'என்றென்றும் புன்னகை' படத்தை இயக்கிய அகமது இயக்கி வரும் இந்தப் படத்தில் நாயகியாக டாப்சி நடித்து வருகிறார். ஜெயம்ரவி ராணுவ வீரராகவும், சர்வதேச ஏஜண்ட் வேடத்தில் டாப்சியும் நடித்து வருகின்றனர்.

மேலும் இந்த படத்தில் கேஜிஎப் படத்தில் நடித்த ராமச்சந்திர ராஜூ வில்லன் வேடத்தில் நடித்து வருவதாக ஏற்கனவே வெளிவந்த செய்தியை பார்த்தோம். இந்நிலையில் இந்த படத்தில் தற்போது ஆக்சன் கிங் அர்ஜுன் இணைந்துள்ளார். அவர் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்து வருவதாகவும், அவருடைய கேரக்டர் ரகசியமாக வைக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. அர்ஜூன் இந்த படத்தில் இணைந்துள்ளதால் இந்த படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

More News

இணையத்தில் வைரலாகும் 'இந்தியன் 2' படத்தின் கதை! 

ஒரு திரைப்படம் ரிலீஸ் ஆனவுடனே அந்த திரைப்படம் இன்டர்நெட்டில் வெளியாகி வசூலில் பெரும் பகுதியைப் பாதித்து வரும் நிலையில் தற்போது இன்னும் ஒருபடி மேலே போய்

ஜிவி பிரகாஷின் 'டக்கரு பார்வை' ரிலீஸ் குறித்த தகவல்!

நடிகரும் இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் ஒரே நேரத்தில் சுமார் பத்து படங்களில் நடித்துக் கொண்டு வருவதால் அவர் நடிக்கும் படங்கள் குறித்த அறிவிப்புகள், புரமோஷன்கள் தினமும் சமூக வலைதளங்களில் வெளியாகி வருகின்றன.

'காப்பான்' திரைப்படத்திற்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு!

நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குநர் கேவி ஆனந்த் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் 'காப்பான்'.

மீண்டும் தல-தளபதி படங்கள் மோதுகிறதா?

கடந்த 2014ஆம் ஆண்டு தல அஜித் நடித்த 'வீரம்' மற்றும் தளபதி விஜய் நடித்த 'ஜில்லா' ஆகிய இரண்டு திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது 

நான் சண்டை போட்டா, நீங்க கேம் விளையாட மாட்ட! கவின் - லாஸ்லியா உரையாடல்

பிக்பாஸ் வீட்டில் இன்று கவினை பெரும்பாலானோர் நாமினேட் செய்துள்ள நிலையில் அடுத்த புரமோவில் கவின், லாஸ்லியா இடையே நடைபெறும் உரையாடல் இடம்பெற்றுள்ளது