லாஸ்லியாவின் முதல் படத்தில் இணைந்த பிரபல ஆக்சன் ஹீரோ!

  • IndiaGlitz, [Monday,February 17 2020]

பிக்பாஸ் புகழ் லாஸ்லியா ஒரே நாளில் இரண்டு திரைப்படங்களில் நடிக்க இருக்கும் செய்தி சமீபத்தில் வெளிவந்தது என்பதை பார்த்தோம். அவர் நடிக்கும் ஒரு திரைப்படத்தில் நாயகனாக ஆரி நடிக்கவுள்ளார் என்பதும் இன்னொரு திரைப்படத்தில் பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நடிக்கவுள்ளார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் லாஸ்லியா, ஹர்பஜன்சிங் உடன் இணைந்து நடிக்கும் திரைப்படத்திற்கு பிரண்ட்ஷிப் என்று அறிவிக்கப்பட்டது. இயக்குனர்கள் ஜான் பால்ராஜ் மற்றும் ஷாம் சூர்யா ஆகியோர் இயக்கும் இந்தப் படத்தை ஜேபிஆர்பி ஸ்டாலின் என்பவர் தயாரிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் இந்த படத்தில் இணையும் ஒரு முக்கிய நடிகர் குறித்த அறிவிப்பு இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என ஏற்கனவே படக்குழுவினர் அறிவித்திருந்தனர். அதன்படி தற்போது ஆக்சன் கிங் அர்ஜுன் அவர்கள் இந்த படத்தில் இணைந்து உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் அர்ஜூன் இணைந்து உள்ளதை அடுத்து இப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

மார்ச் 3 ஆம் தேதி நிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை உறுதி – டெல்லி நீதிமன்றம் உத்தரவு

டெல்லியில் 2012 ஆம் ஆண்டு ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப் பட்டு, கொலை செய்யப் பட்டார்.

தர்பார் பட விவகாரம்: ஏ.ஆர்.முருகதாஸ் வழக்கில் திடீர் திருப்பம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் லைகா நிறுவனம் தயாரித்த 'தர்பார்' திரைப்படம் கடந்த பொங்கல் தினத்தில் உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியானது

"அறிவுள்ள எந்த மனிதர் இப்படிப் பேசுவார்"?! ஆர்.எஸ்.எஸ் தலைவரை சாடிய சோனம் கபூர்.

”அறிவுள்ள எந்த மனிதர் இப்படிப் பேசுவார்? முட்டாள்தனமான, பிற்போக்கான கருத்து” எனக் காட்டமாக சாடியுள்ளார் சோனம் கபூர்.  

மும்பை ஜிஎஸ்டி பவனில் பெரும் தீ விபத்து – மீட்பு பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரம்

மும்பை மாநிலத்தில் பைகுல்லா பகுதியை அடுத்த பிரதாப் சவுத் என்னும் இடத்தில் உள்ள ஜிஎஸ்டி பவன் கட்டிடத்தில் திடீரென பெரும் தீ விபத்து ஏற்பட்டது

சிவபெருமானுக்காக ரிசர்வ் செய்யப்பட்ட சைடு அப்பர் பெர்த்..! மோடி துவக்கிய காசி மஹாகால் எக்ஸ்பிரஸ்.

வாரணாசியில் நேற்று காசி மஹாகால் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் மோடி கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.