நீண்ட இடைவெளிக்கு பின் பான் - இந்திய படம் இயக்கும் அர்ஜுன்.. ஹீரோ, ஹீரோயின் யார் தெரியுமா?

  • IndiaGlitz, [Thursday,August 10 2023]

ஆக்சன் கிங் அர்ஜுன் நடிகர் மட்டுமின்றி சில படங்களை இயக்கியுள்ளார் என்பதும் அவர் இயக்கத்தில் உருவான பல படங்கள் வெற்றி பெற்றுள்ளன என்பது தெரிந்தது. அந்த வகையில் தற்போது நீண்ட இடைவெளிக்கு பின் தற்போது மீண்டும் ஒரு படத்தை இயக்க இருப்பதாகவும் அந்த படம் பான் - இந்திய திரைப் படமாக அமைய இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அர்ஜுன் இயக்கத்தில் உருவான ’சேவகன்’ ’பிரதாப்’ ’ஜெய்ஹிந்த்’ ’தாயின் மணிக்கொடி’ ’வேதம்’ ’ஏழுமலை’ உள்பட ஒரு சில திரைப்படங்கள் மிகப்பெரிய ஹிட் ஆகியுள்ளன.

இந்த நிலையில் விஜய்யின் ’லியோ’ உள்பட ஒரு சில படங்களில் நடித்து வரும் அர்ஜுன் தற்போது ஒரு திரைப்படத்தை இயக்க உள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் படமாக உருவாக இருக்கும் இந்த படத்தில் நிரஞ்சன் ஹீரோவாக நடிக்க உள்ளார். இவர் பிரபல கன்னட நடிகர் உபேந்திராவின் அண்ணன் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் நாயகியாக அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா நடிக்க உள்ளார். இவர் ஏற்கனவே ’பட்டத்து யானை’ ’சொல்லி விடவா’ போன்ற படங்களில் நடித்துள்ளார். இந்த படத்தில் சத்யராஜ், பிரகாஷ்ராஜ், ஜெயராம் உள்ளிட்டவர்கள் நடிக்க இருப்பதாகவும், அர்ஜுன் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

’கேஜிஎப்’ படத்துக்கு இசையமைத்த ஹித்தேஷ் இசையில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் ஹைதராபாத்தில் தொடங்கி உள்ளது.

More News

மும்பை ஏர்போர்ட்டில் ஆர்யா-சாயிஷா.. பேபியின் க்யூட் வீடியோ வைரல்..!

மும்பை ஏர்போர்ட்டில் ஆர்யா, சாயிஷா, ஆர்யா-சாயிஷாவின் மகள் மற்றும் சாயிஷாவின் அம்மா ஆகியோர் இருக்கும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

த்ரிஷா அழகா? அவர் சென்ற நாடு அழகா? க்யூட் புகைப்படங்கள்..!

நடிகை த்ரிஷா ஸ்காண்டிநேவிய நாடுகளுக்கு சென்றுள்ள நிலையில் அங்கிருந்து எடுத்த அழகிய புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள்

ஷாருக்கான், விஜய்சேதுபதி, நயன்தாரா: மிரட்டும் 'ஜவான்' புதிய போஸ்டர்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'ஜெயிலர்' திரைப்படம் இன்று வெளியாகி மிகப்பெரிய பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வரும் நிலையில் அடுத்து வெளியாக இருக்கும் பெரிய படம் ஷாருக்கானின் 'ஜவான்'

உலகத்தில இருக்குற எந்த ஆயுதத்தையும் வைத்து அவனை கொல்ல முடியாது: 'வெப்பன்' டீசர்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'ஜெயிலர்' திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில் இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ள வசந்த் ரவி ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் தான்

சாலையில் செல்லும் போது திடீரென ஏற்பட்ட விபரீதம்.. மருத்துவமனையில் ரைசா வில்சன்..!

நடிகை ரைசா வில்சன் சாலையில் நடந்து செல்லும் போது திடீரென பூனை அவரை கடித்ததை எடுத்து அவர் மருத்துவமனை சென்று சிகிச்சை எடுத்துக் கொண்டதாக புகைப்படத்துடன் கூடிய பதிவை செய்துள்ளார்.