6 வருடங்களுக்கு பின் மீண்டும் இயக்குனர் களத்தில் அர்ஜுன்.. டைட்டில் அறிவிப்பு..!

  • IndiaGlitz, [Wednesday,October 16 2024]

தமிழ் திரையுலகில் கடந்த 40 ஆண்டுகளாக நடித்து வரும் ஆக்சன் கிங் அர்ஜுன், 6 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் ஒரு படத்தை இயக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டு, அந்த படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகியுள்ளது.

கடந்த 1984 ஆம் ஆண்டு நன்றி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அர்ஜுன், அறிமுகமானார். அதன் பின்னர் பல திரைப்படங்களில் நடித்த நிலையில் அவரது திரைப்படங்கள் பல சூப்பர் ஹிட் வெற்றி பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

கடந்த 1992 ஆம் ஆண்டு சேவகன் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான அர்ஜுன், ஜெய்ஹிந்த், தாயின் மணிக்கொடி, வேதம், ஏழுமலை உள்ளிட்ட பல படங்களை இயக்கினார். அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா நடித்த சொல்லிவிடவா என்ற படத்தை 2018 ஆம் ஆண்டு இயக்கிய அவர், தற்போது ஆறு வருடங்களுக்கு பின் மீண்டும் இயக்குநராக பணியாற்ற உள்ளார்.

அர்ஜுன் இயக்கத்தில் உருவாக இருக்கும் புதிய படத்திற்கு சீதா பயணம் என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீராம் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் நடிக்கும் நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், அஜீத்துடன் அர்ஜுன் நடித்த விடாமுயற்சி திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

என்.டி.ஆர் பாலகிருஷ்ணாவின் சூப்பர் ஹிட் படம்.. பூஜையுடன் படப்பிடிப்பு தொடக்கம்..!

என் டி ஆர் பாலகிருஷ்ணா நடித்த சூப்பர் ஹிட் படம் ஒன்றின் இரண்டாம் பாகத்தின் பூஜை இன்று நடைபெறுவதை அடுத்து படக்குழுவினர்களுக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

 இனி பேட்டி, வீடியோ கிடையாது:  திடீரென அதிரடி முடிவெடுத்த பாடகி சுசித்ரா..!

பாடகி சுசித்ரா அவ்வப்போது சர்ச்சைக்குரிய வகையில் வீடியோவை வெளியிட்டும் YouTube சேனல்களில் பேட்டி அளித்தும் வந்த நிலையில் தற்போது மும்பையில் செட்டில் ஆகப் போவதாகவும்

என்ன ஆச்சு நிரோஷாவுக்கு? 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' படப்பிடிப்புக்கு தூக்கி கொண்டு வந்த நடிகர்..!

நடிகை நிரோஷா, விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் "பாண்டியன் ஸ்டோர் 2" என்ற சீரியலில் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் நிலையில், இந்த படப்பிடிப்புக்கு, அவரை அவரது மகன் கேரக்டரில் நடிக்கும் நடிகர்

நீங்க ஓட்டு போடனும்ன்னு அவசியம் இல்லை.. திடீரென ஆவேசமான ஜெப்ரி..!

விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில், திடீரென போட்டியாளர் ஜெப்ரி, மற்ற போட்டியாளர்களை நோக்கி, "

அனிருத்தின் மேஜிக்கல் வாய்ஸ்: 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' படத்தின் சிங்கிள் பாடல்..!

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' என்ற படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் இன்று வெளியாகி உள்ள நிலையில் அனிருத் பாடிய இந்த பாடல் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.