6 வருடங்களுக்கு பின் மீண்டும் இயக்குனர் களத்தில் அர்ஜுன்.. டைட்டில் அறிவிப்பு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் திரையுலகில் கடந்த 40 ஆண்டுகளாக நடித்து வரும் ஆக்சன் கிங் அர்ஜுன், 6 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் ஒரு படத்தை இயக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டு, அந்த படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகியுள்ளது.
கடந்த 1984 ஆம் ஆண்டு "நன்றி" என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அர்ஜுன், அறிமுகமானார். அதன் பின்னர் பல திரைப்படங்களில் நடித்த நிலையில் அவரது திரைப்படங்கள் பல சூப்பர் ஹிட் வெற்றி பெற்றதும் குறிப்பிடத்தக்கது.
கடந்த 1992 ஆம் ஆண்டு "சேவகன்" என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான அர்ஜுன், "ஜெய்ஹிந்த்," "தாயின் மணிக்கொடி," "வேதம்," "ஏழுமலை" உள்ளிட்ட பல படங்களை இயக்கினார். அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா நடித்த "சொல்லிவிடவா" என்ற படத்தை 2018 ஆம் ஆண்டு இயக்கிய அவர், தற்போது ஆறு வருடங்களுக்கு பின் மீண்டும் இயக்குநராக பணியாற்ற உள்ளார்.
அர்ஜுன் இயக்கத்தில் உருவாக இருக்கும் புதிய படத்திற்கு "சீதா பயணம்" என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீராம் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் நடிக்கும் நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், அஜீத்துடன் அர்ஜுன் நடித்த "விடாமுயற்சி" திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
The visionary behind some of the most heartfelt stories ❤🔥
— Sree Raam Film International (@SreeRaamFilms) October 16, 2024
'Action King' #ArjunSarja' is back with his next directorial, #SeethaPayanam❤
An emotional voyage that will tug at your heartstrings ❤🔥
A trilingual film in Telugu, Tamil & Kannada✨@akarjunofficial pic.twitter.com/oGpdNn0FnK
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com