18 மணிநேரம் பேக்கப்பா ??? அசத்தும் புதிய லேப்டாப் அறிமுகம்!!!
- IndiaGlitz, [Wednesday,November 11 2020]
கொரோனா காலத்தில் செல்போன் மற்றும் லேப்டாப்களின் பயன்பாடு ரொம்பவே அதிகரித்து விட்டது. அந்த வகையில் வாடிக்கையாளர்களை குசிப்படுத்த தற்போது 18 மணிநேரம் பேக்அப் கொண்ட புதிய லேப்டாப் மாடலை ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தி இருக்கிறது.
தொழில்நுட்பத்தில் சிறந்த நிறுவனமாகக் கருதப்படும் ஆப்பிள் தனது One More Thing நிகழ்ச்சியில் புதிய மேக்புக் ஏர் மாடலை அறிமுகப்படுத்தி இருக்கிறது. அதில் எம்1 சிப்செட் உள்ளடங்கி இருக்கிறது. ஆப்பிள் நிறுவனத் தயாரிப்புகளில் முதல் சிப்செட் மாடல் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆப்பிள் நிறுவனத்தின் முந்தைய மேக்புக் ஏர் மாடலை விட இது 3.5 மடங்கு சிறப்பான சிபியு மற்றும் 5 மடங்கு வேகமான ஜிபியு திறன் உடையது என்றும் கூறப்படுகிறது. இத்துடன் 13.3 இன்ச் ரெட்டினா டிஸ்ப்ளே மேலும் 16 ஜிபி ரேம், 2 டிபி வரையிலான எஸ்எஸ்டி ஸ்டோரேஜ் போன்றவையும் இதன் சிறப்பம்சங்களாக கருதப்படுகிறது.
இதைத்தவிர தண்டர்போல்ட் / யுஎஸ்பி 4, ஐடி, வைபை 6, செக்யூட்டி என்கிளேவ் அம்சம், ஐபோன் மற்றும் ஐபேட் செயலிகளை இயக்கும் வசதியும் இதில் வழங்கப்பட்டு உள்ளது. புதிய மேக்புக் ஏர் மாடலின் துவக்க விலை 999 டாலர்கள் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இன்றைய இந்திய மதிப்பில் இது 74 ஆயிரத்தைத் தாண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.