close
Choose your channels

'விஜய் 60' படத்தில் இணைந்த இன்னொரு பிரபல நடிகை

Saturday, April 30, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com
இளையதளபதி விஜய் நடித்த 'தெறி' படம் உலகம் முழுவதும் சூப்பர் ஹிட் ஆகியுள்ள நிலையில் அவர் நடிக்கவுள்ள அடுத்த படமான 'விஜய் 60' திரைப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு வரும் மே மாதம் விஜய்யின் அறிமுகப்பாடலுடன் நடைபெறவுள்ளது.

இந்த படத்தின் நாயகியாக கீர்த்தி சுரேஷ், காமெடி கேரக்டரில் சதீஷ், வில்லனாக ஜெகபதிபாபு, டெனியல் பாலாஜி ஆகியோர் ஏற்கனவே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது பிரபல மலையாள நடிகை அபர்ணா வினோத் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
இந்த படத்தின் மிக முக்கிய கேரக்டருக்காக அபர்ணா ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாகவும், அவருடைய கேரக்டர் படத்தின் திருப்புமுனையாக அமையும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். மலையாளத்தில் சூப்பர் ஹிட் ஆன 'கோஹினூர்' உள்பட பல படங்களில் அபர்ணா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
'அழகிய தமிழ்மகன்' பரதன் இயக்கும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கின்ரார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment