தல-தளபதி குறித்து சிம்பு நாயகியின் கமெண்ட்
- IndiaGlitz, [Thursday,August 18 2016]
கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள 'அச்சம் என்பது மடமையடா' படத்தின் நாயகி மஞ்சிமா மோகன், அந்த படம் வெளிவருவதற்குள் கோலிவுட் ரசிகர்களின் அன்பை பெற்றுள்ளார். இந்நிலையில் சமீபத்தில் அவர் சமூக வலைத்தளத்தில் உரையாடியபோது ரசிகர்களின் கேள்விகளுக்கு சுவாரஸ்யமாக பதிலளித்துள்ளார். இதில் தல, தளபதி குறித்த கேள்விகளும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதோ ரசிகர்களின் கேள்விகளும் மஞ்சிமாவின் பதில்களும்.
உங்களுடைய ஆல்டைம் ஃபேவரைட் படம் எது?
அலைபாயுதே
இந்த கேள்விக்கு தயங்காமல் பதில் சொல்லுங்கள். தல, தளபதி இருவரில் உங்களுக்கு யாரை அதிகம் பிடிக்கும்?
இருவரையும்
நீங்கள் விரும்பாத கேள்வி எது?
எனது திருமணம் குறித்த கேள்விகள்
நடிகை மடோனா செபாஸ்டியன் குறித்து...
நான் சந்தித்தவரையில் மிகவும் இனிமையானவர்
இளையதளபதி விஜய் குறித்து?
எளிமையானவர், அடக்கமானவர்
தமிழ் சினிமாவில் உங்களுக்கு மிகவும் பிடித்த மூன்று பாடல்கள்
தள்ளிப்போகாத, நெருப்புடா, செஞ்சிட்டாளே
உங்களுக்கு பிடித்த டாப் 3 ரொமாண்டி தமிழ் படங்கள்
அலைபாயுதே, காக்க காக்க, மின்னலே
சிம்பு நடித்த படங்களில் உங்களுக்கு பிடித்தது?
மன்மதன்