சிம்புவின் 'அச்சம் என்பது மடமையடா' சென்னை வசூல் நிலவரம்

  • IndiaGlitz, [Sunday,November 13 2016]

சிம்பு நடிப்பில் கவுதம் மேனன் இயக்கிய 'அச்சம் என்பது மடமையடா' திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியாகி ஊடகங்களிலும், சமூக இணையதளங்களிலும் பாசிட்டிவ் ரிசல்ட்டை பெற்றுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் சென்னை வசூல் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. சென்னையில் இந்த படம் 23 திரையரங்க வளாகங்களில் 511 காட்சிகள் திரையிடப்பட்டு ரூ.2,10,35,260 வசூல் செய்துள்ளது. திரையரங்குகளில் 95% பார்வையாளர்கள் நிரம்பியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையை பொருத்தவரையில் இந்த வருடத்தில் வெளியான படங்களில் 3வது பெரிய ஓப்பனிங் வசூல் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. ரூ.500, ரூ.1000 தடை விதிக்கப்பட்டு பணப்புழக்கம் குறைவான நேரத்திலும் இந்த படம் நல்ல வசூலை பெற்றுள்ளது பெரிய விஷயமாக கருதப்படுகிறது.

More News

நயன்தாரா படத்தில் இணைந்த பிரபல எழுத்தாளர்கள்

கோலிவுட்டின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா முதன்முதலாக சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடிக்கும் படத்தின் பூஜை சமீபத்தில் நடந்தது. மோகன் ராஜா இயக்கத்தில் ஆர்.டி.ராஜாவின் 24ஏம் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மணிரத்னம் இயக்கும் அடுத்த பட டைட்டில் இதுதான்

கார்த்தி, அதிதிராவ் ஹைதி நடிப்பில் மணிரத்னம் இயக்கி வரும் 'காற்று வெளியிடை' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

விஷ்ணுவின் கதாநாயகன்' படத்தில் இணைந்த பிரபலம்

சமீபத்தில் விஷ்ணு நடித்த 'வேலையில்லா பட்டதாரி' வெளியாகி 100 நாட்கள் ஓடி சாதனை புரிந்த நிலையில் விஷ்ணு தற்போது 'கதாநாயகன்' என்ற படத்தில் நடித்து வருகிறார்.

சபர்ணாவை அடுத்து மற்றொரு நடிகை மரணம். அதிர்ச்சி தகவல்

பிரபல தொலைக்காட்சி சீரியல் நடிகை அபர்ணா கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னையில் உள்ள அபார்ட்மெண்ட் வீட்டில் தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தியின் அதிர்ச்சியில் இருந்தே இன்னும் திரையுலகினர்கள் மீளவில்லை. ஆனால் அதற்குள் இன்னொரு நடிகையின் மரண செய்தி வந்து அதிர்ச்சிமேல் அதிர்ச்சி அளித்துள்ளது.

சபர்ணாவின் சோக முடிவுக்கு காரணம் என்ன? போலீஸார் விசாரணையில் திடுக் தகவல்

தொலைக்காட்சி சீரியல் நடிகை சபர்ணாவின் மரணம் சின்னத்திரை கலைஞர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இந்நிலையில் சபர்ணா தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா?