ஆகஸ்ட்டில் கவுதம் மேனனின் 2 படங்கள் ரிலீஸ்

  • IndiaGlitz, [Friday,July 29 2016]

பிரபல இயக்குனர் கவுதம்மேனன், சிம்பு நடித்த 'அச்சம் என்பது மடமையடா' மற்றும் தனுஷ் நடித்த 'எனை நோக்கி பாயும் தோட்டா' ஆகிய இரண்டு படங்களை ஒரே நேரத்தில் இயக்கி வந்தார்.

இந்நிலையில் 'அச்சம் என்பது மடமையடா' படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில் வரும் ஆகஸ்ட் மாதம் சுதந்திரதின விடுமுறை வாரத்தில் இந்த படம் ரிலீஸ் ஆகும் என்று கூறப்படுகிறது. 'தள்ளிப்போகாதே' பாடலின் படப்பிடிப்பு இன்னும் முடியாத நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளிவந்துள்ளது ஆச்சரியத்தை அளிக்கின்றது.

இந்நிலையில் கவுதம் மேனன் தயாரித்த 'தமிழ்ச்செல்வனும் தனியார் அஞ்சலும்' படம் வரும் ஆகஸ்ட் 5ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஆகஸ்ட் மாதத்தில் கவுதம் மேனனின் இரண்டு படங்கள் ரிலீஸ் ஆவது கிட்டத்தட்ட உறுதி ஆகியுள்ளது.

ஜெய், யாமி கவுதம், சந்தானம், விடிவி கணேஷ், நாசர், சரண்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை பிரேம்சாய் இயக்கியுள்ளார்.