'அச்சம் என்பது மடமையடா' படத்தின் முக்கிய தேதிகள்

  • IndiaGlitz, [Tuesday,May 24 2016]

சிம்பு, மஞ்சிமாமோகன் நடிப்பில் கவுதம் மேனன் இயக்கிய 'அச்சம் என்பது மடமையடா' படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்துள்ள நிலையில் இந்த படத்தின் அனைத்து முக்கிய தேதிகள் குறித்த விபரங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

இந்த படத்தின் 'ராசாளி' என்ற சிங்கிள் பாடல் மே 26-ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகிறது. இதற்கு அடுத்த நாள்தான் அதாவது மே 27-ஆம் தேதி சிம்புவின் 'இது நம்ம ஆளு' ரிலீஸ் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் இசை வெளியீடு வரும் ஜூன் மாதம் 17ஆம் தேதி வெளியாகிறது. மேலும் இந்த படம் உலகம் முழுவதும் வரும் ஜூலை மாதம் 15ஆம் தேதி வெளியாகிறது.

அடுத்தடுத்து சிம்பு நடித்த படம், சிங்கிள் பாடல், ஆடியோ ரிலீஸ் ஆகியவை ரிலீஸ் ஆகவுள்ளதால் சிம்பு ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.